பக்கம்:ஐந்திணை வளம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - - ஐந்திணை வளம் திரிவனவாக இருந்தன. இதனால் இந்த வழியோடு சென்று பொருளிட்டி மீள்வதென்பது, பெரிதும் இடர்ப்பாடான முயற்சியாகவே விளங்கியது. இந்தச்சூழ்நிலையும்தலைவியரின் பிரிவுத்துயரோடு சேர்ந்து கொள்ள அவர்களுடைய வருத்தம் அளவின்றி மிகுதியாகின்றது. இங்கே ஒன்றை நாம் மனத்திற் கொள்ளல் வேண்டும். பாலை நிலத்து மக்களை மறவர் என்று குறிப்பதனால், மறவர் எல்லாருமே பண்டை நாளில் பாலைவாழ் பகுதியினரைப் போன்றே, இரக்கமற்ற கொடுந்தகையினராக இருந்தனர் எனக் கொண்டுவிடுதல் கூடாது. போர்வீரராகிய மறமாண்பினை உடைய பிற நிலத்தவரும் மறவராகவே இருந்தனர். அவர் களுடைய பண்பு மிகமிகச் சால்பு உடையதாகவும் இருந்திருக் கிறது. ஆகவே, இல்லாமையே பாலைநிலத்தவரின் கொடுமை யான மனப்போக்கிற்குக் காரணமாதலை உணர்தல் வேண்டும். இனிப் பிரிவு என்பது, காலினும் கலத்தினும் என இரண்டாக அமையும் என்பதனையும், காலிற் பிரிவு தரைவழிச் செலவையும், கலத்திற் பிரிவு கடல்வழிச் செலவையும் குறிக்கும் என்பதன்ையும் அறிதல் வேண்டும். - 1. சுரம் நிரைத்து தலைமகன், தலைவியைப் பிரிந்து பொருள் தேடி வருதலின் பொருட்டாகச் செல்லுதற்கு விரும்பியவனாக, அதற்கான திட்டங்களை அவளறியாதேயே மேற்கொள்ளு கின்றான். ஆனால், இதனைக் குறிப்பினாலே உணர்கின்றாள் தலைவியின் தோழி, தலைவனின் ஆர்வம் தலைவியை விட்டுப் பொருளின்பாலாக முடுகிச்செல்லுதலை அறிந்து, அவள்மனம் பெரிதும் வேதனைப்படுகின்றது. அவ்வாறு நிகழாமல், அவன் செலவினைத் தடுக்கவேண்டும் எனவும், அவனது ஆர்வத்தை மீண்டும் தலைவியின்பாலாகத்திருப்பவேண்டும் எனவும் அவள் கருதுகின்றாள். அந்தக் கருத்துடனே தலைவியிடத்து வந்து, தலைவனது விருப்பத்தைப்பற்றிக்கூறி அவளை எச்சரிப்பதிலும் ஈடுபடுகின்றாள். - இப்படிச் சொல்லும் தோழி, நேரடியாகச் செய்தியைச் சொல்லவும் தொடங்கினாளில்லை. மிகவும் நயமாகவும், பக்குவமாகவும்,மறைமுகமாகவே குறிப்பாக உணர்த்துகின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/60&oldid=761863" இலிருந்து மீள்விக்கப்பட்டது