பக்கம்:ஐந்திணை வளம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 65 தலைவிக்கு மிகவும் வேண்டியவள் அவளுடையதோழி ஒருத்தியே. அவள்பால் மிகவும் அன்புடையவளும், அவளது நல்வாழ்விலே அக்கறையுடையவளும் அவள். மேலும்,உலகியலினை நன்கறிந்த அறிவுத் திட்பத்தினையும் அவள் கொண்டவள், அவள்மூலம் தன் செலவினை உரைத்துத் தலைவியை இசைவிக்கலாம் என எண்ணுகின்றான் தலைவன். தலைவியின் உள்ளம், தன்மேற் கொண்டிருக்கின்ற அளவிறந்த காதற் பெரும்பாசத்தினாலே உண்மையினை உணராது பேதுற்றிருப்பது; அதனால் அது, தன் பிரிவின் கொடுமையைத்தான்நினைத்து ஏங்குமேயன்றி, ஆண்மகனாகிய தான் செய்தற்கான கடமைகளையும், அக்கடமைகளைச் செய்வதன்மூலம் வந்து பெருகும் வாழ்க்கை வளங்களையும் நினையாத தன்மையதாகும். தோழியின் மனநிலை அப்படிப் பட்டதன்று. நெடுங்காலமாகத் தொடர்ந்து இன்ப நலத்துடன் திகழுகின்ற தலைவியினது இல்லற நல்வாழ்வினையே விரும்புகின்றவள் அவள். அதனால், அதற்கு வேண்டிய பொருளினைத் தலைவன் தேடிவருதல் வேண்டு மென்பதனையும் உணர்வாள். அதற்கு அவன் செல்லுங் காலத்துத் தலைவி அவன் பிரிவினைப் பொறுத்து ஆற்றியிருத்தல் வேண்டுமென்பதனையும் அவள் மறவாள். இந்த நினைவுகளால் தலைவனிடம், தோழியொருத்தியே தன் கவலையைப் போக்கக் கூடியவள் என்ற நம்பிக்கை பிறக்கின்றது. அவன், அவளை நாடிச் சென்று, அவளிடம் தன்னுடையவிருப்பத்தினையும் உரைக்கின்றான். - அவள், அதனைக் கேட்டதும், அவன் பிரிவினாலே தலைவிக்கு நேரும் இன்னல்களைப் பற்றியே முதலில் நினைக்கின்றாள். ஆகவே, அதனை உரைத்து அவனைப் போகலாகாது எனவும் தடுக்கின்றாள். தோழியின் இந்த உரையினைப் பொருளாகக் கொண்ட செய்யுள் இது. 'தலைவனே!" 'ஒமை மரங்கள் பொறிப்பொறியாக விளங்கும் மேற்புறத்தைக் கொண்டன. அவற்றின் நீழல், செறிவோடு விளங்காமல் இலைகள் உதிர்ந்து போயினதாற், புள்ளி பட்ட நீழலாகவே கோடையில் விளங்கும். அத்தகைய புள்ளிபட்ட நீழலிலே செவ்வரியினையுடைய நெற்றியினைக் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/73&oldid=761877" இலிருந்து மீள்விக்கப்பட்டது