பக்கம்:ஐந்திணை வளம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் o 79 மயக்கித் தம்பாற் கொண்டுவிட முயலும் இயல்பினர். அவர்கள்பால் தவறு ஏதுமில்லை. ஆனால், இவன்? எனக்கே உரியவன். அவர்களோடு பொழில் விளையாடச் சென்று, அவர்கள் மாலையாற்பிணித்துமகிழ்ந்தாட, அந்த மயக்கத்திலே அறிவிழந்தான். அவர்கள்பால் காமுற்று அவர்களைக் கூடுதலைக் கருதி, அதே நினைவாக இருக்கின்றான். அவர்களை எப்படிக்குறைகூற முடியும்? இவனது அறியாமையைக் கண்டுதானே, அவர்கள் இவனைத் தம் வலையிலே இட்டுக் கொள்ளச் சூழ்கின்றனர்? ஆகவே, இவனைத்தான் நோவது பொருத்தமே தவிர, அவர்களை நோவது எதற்காக? இவ்வாறு தனக்குள் நினைவோட்டத்தை நிகழ்த்தி வருந்துகின்றாள் தலைவி தலைவியரின் மனப்பாங்கினை விளக்கும் சிறந்ததொரு ஓவியம் இது. அகன்பணை ஊரனைத் தாமம் பிணித்தது இகன்மை கருதி யிருப்பன்-முகன் அமரா ஏதின் மகளிரை நோவ கெவன்கொலோ பேதமை கண்டொழுகு வார்? பணை-வயல்கள்,தாமம்-மாலை, இகன்மை-மாறுபாடு, அமர்தல்-பொருந்துதல் ஏதின்மகளிர் என்றது.பரத்தையரை, தலைமகனது போற்றா ஒழுக்கினை நினைந்து புலந்து, தலைமகள் கூறியது இது. தலைமகளின் காதலுள்ளம், தலைமகனின் செயலால் வெந்தழிகின்ற வேதனைப் பெருக்கத்தினையும் நாம் இதனால் உணரலாம். 3. கூத்தாடி உண் தலைமகன் ஒருவன்பரத்தை ஒருத்தியை மிகவும் விரும்பி அவள் வீட்டிலேயே இருந்து வருபவனும் ஆகின்றான். தலைமகள், தலைமகனது செயலினை நினைந்து கொதித்தவளாகத், தான் பெற்ற மகனைக் கொஞ்சியும் பேணியும் அதனால் ஒருவாறு தன்னுடைய ஏக்கத்தை மறந்து விடமுயன்று கொண்டிருக்கின்றாள். இந்நிலையிலே ஒருநாள், தலைவன், தன்னுடைய ஏவலனாகிய பாணனை அழைத்துப் பாண, யாம் இன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/87&oldid=761892" இலிருந்து மீள்விக்கப்பட்டது