பக்கம்:ஐந்திணை வளம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ஐந்திணை வளம் ஆகவே, மலர்போன்ற அவனது காதலினை என்பால் வந்து உரைத்தல் வேண்டா! ஊர்ப்புறத்தே உள்ளவரான அவன் பரத்தையர்கள்பாற் கொண்டு சென்று உரைத்து நிற்பாயாக' என்கின்றாள். - - மனையாளைக் கைவிட்டுக் காமத்தால் பரத்தையர் சேரியுட் புகுந்து இளம்பரத்தையின் நேசத்திலே மூழ்கிக் கிடக்கின்ற தலைவனை, உழலை முருக்கிய செந்நோக்கு எருமைக்கு உவமை காட்டி கூறும் திறத்தினை, அறிந்து இன்புறுதல் வேண்டும். . 5. கண்டதும் மகிழ்ந்தாள் தன் மகள், அவள் தன் காதலனுடனே மணந்து இல்லற வாழ்விலே திளைத்திருப்பதனைக் கண்டால், எந்தத் தாயின் உள்ளமும் இறும்பூது அடைதல் இயல்புதான். செவிலித்தாய், தலைவி புதல்வனைப் பெற்று இருப்பதறிந்து, மிகவும் களிப்புடன் மகளுக்கு உதவியாக வருகின்றாள். தலைவனும் தலைவியும் நடத்தி வருகின்ற இல்லறவியல்பினைக் கண்டதும் அவள் மனம் மகிழ்விலே திளைத்துக் கூத்தாடுகின்றது. ஒருநாள்,தலைவியைப் பெற்றதாய் அங்கு வருகின்றாள். மகளுடையநலத்தையும் மகள் வயிற்றுப்பேரனின் நலத்தையும் பார்த்துச் செல்லுவதற்கு வந்த அவள், தான் கண்டு மகிழ்ந்ததுடன் அமையாமல், செவிலியைத் தனியே அழைத்து, 'நம் மகளின் மணவாழ்வு எங்ங்னம் இயல்கின்றது என்றும் கேட்கின்றாள். நேரடியாக அவளுக்கு எதுவும் கூறாமல், தான் அன்று மாலை நேரத்திலே கண்ட இனிய காட்சியினைக் கூறி அதனை விளக்குகின்றாள் செவிலி. ‘தேன்மணம் நாறுகின்ற பொய்கைகளையுடைய மருதநிலத்தேயுள்ள, வயல்கள் சூழ்ந்த ஊருக்கு உரியவனான தலைவனை, அழகிய கண்களையுடைய புதல்வனானவன், தன் கால்களால் மிதித்துத் துவைத்துக் கொண்டிருந்தான்.' தன் மகன் தந்தையை மிதித்துத் துவைக்கின்ற அந்தக் காட்சியினைத் தன்னை மறந்த இன்பபோதையுடனே கண்டு களித்த நம் மகள், தானும் சென்று தலைவனின் அருகே அமர்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/92&oldid=761898" இலிருந்து மீள்விக்கப்பட்டது