பக்கம்:ஐந்திணை வளம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 87 "ஆனால், நினக்கு ஏதாயினும் குறையுண்டோ? இருந்தால் அதனை இங்குக் கூறுக.தலைவனைப்பற்றி ஏதுவும் கூறுதல் வேண்டா' தலைவியின் பேச்சிலே வெளிவந்த சினத்தைப் பாணன் உணர்ந்தான். அவன் உள்ளம் தலைவிபால் இரக்கமுற்றுப் பெரிதும் வருத்தியது. இத்தகைய கற்புநல்லாளைக் கவலையுறுமாறு விட்டுச் சென்ற தலைவனின் போக்கினைக் கருதி, அவனே மனவருத்தம் கொண்டான். யாணர்நல்லூரன்திறங்கிளப்பல் என்னுடைய பாண இருக்க அதுகளை--நாணுடையான் தன்னுற்ற எல்லாம் இருக்க, இரும்பாண! நின்னுற்ற துண்டேல் உரை. “நினக்கு என்னால் செய்யக்கூடிய உதவி ஏதாவது இருந்தால், அதனைப்பற்றி பேசு தலைவனைப் பற்றி எதுவுமே பேசுதல் வேண்டா என்று கொதிப்புடன் கூறுகின்றாள்.தலைவி. அந்தக் கொதிப்பிலே நெளிந்தோடுகின்ற மேம்பாடு பெரிது. "நாண் உடையான்’ எனத் தலைவனைக் குறித்தது, அவன், பரத்தைமை உறவுபற்றி ஊரிலெழுந்த பழி குறித்து நாணாது இருந்ததனைப் பழித்ததாம். ‘என்னுடைய பாண இரும்பாண என்றது, பாணனை ஏளனமாகக் குறிப்பிட்டு விளித்ததாம். 8. பொய்ச்சூள் அறியாதேன் தலைமகளைப் பிரிந்து,தலைமகன், புதியளான பரத்தை ஒருத்தியின் மையலிலே சிக்குண்டு கிடக்கின்றான். அந்த அறக்கொடுமையினைப் பொறுக்கவியலாது துடிக்கின்ற தலைமகளைத் தோழி தேற்றிக் கொண்டிருக்கின்றாள். அப்பொழுது, தலைவன் தன்னைத் தலையளி செய்து கூடிய நாளிலேபேசியபேச்சும்,உரைத்தகுள் உரைகளும் உள்ளத்திலே அலையலையாக எழுந்து வருத்தத்தை மிகுவிக்கத் தலைமகள், தோழியிடத்திலே இப்படிக் கூறுகின்றாள்; 'ஒள்ளிய அணிகளைப் பூண்டிருப்பவளே! ‘மேனாளிலே என்னைத் தெளிவித்துப் '೨fGur Trமு! சூளுரைத்த தலைவனின் சொற்களை நான் உண்மையென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/95&oldid=761901" இலிருந்து மீள்விக்கப்பட்டது