பக்கம்:ஒய்யாரி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்யாரி 毒 போகலாம். ஆனுல் இன்னும் அந்திமந்தாரை வரக் காணோமே ஐயா! ' பின்னே என்ன அவசரம் மெதுவாப் போகலாம். அந்தியிலே மந்தாரை பூக்கலேன்னா அதற்கு மதிப்பு ஏது! ' இது ஜாலி பிரதர்களின் சம்பாஷணை. வீதி மூலையிலே ஒய்யாரி வருகிறாள் என்றால் அந்தத் தெருவிலேயே பரபரப்பு ஏற்படும். இவள் யார் இவள் யாராக இருக்கலாம்-இது தான் எல்லோரது மனதிலும் கிடந்து விடையற்றுத் தவிக்கும் பிரச்னை. "யாராக இருந்தால் என்ன ? அவள் அழகி. அழகை எடுத்துக் காட்டி வனப்பு நிலாச் சிதறவல்ல சிங்காரி. சிங்காரத்தை நாலு சுவர்களுக் கிடையே, திரைகளுக்குப் பின்னே, நிறுத்திவிட மனமில்லாமல் ஊர்வலம் வருகிற ஒய்யாரி. அவள் பெயர் எதுவாகவும் இருக்கட்டுமே. நம்மைப் பொறுத்த வரையில் அவள் மோகினி தான்' என்றார் ஒருவர் ஒரு சமயம். "அது சரி. இவள் மிஸ் மோகினியா, மிளின் மோகினியா? அல்லது........' 'கற்பனேக்குக் கட்டுப்பாடும் கஞ்சத்தனமும் எதத காக அவள் மிஸ்ள தான் என்று சீறிஞர் ஒரு ரசிகர். எஸ்ஸு' என்று ஆமோதித்தார் ஹைறிருதயர்' ஒருவர். அவள் பெயர் எதுவாயினும், ஊர் எதுவாயினும், அவள் கதை என்னவே யாயினும், அவள் "மிஸ் மோகினி' என்றே பூஜிக்கப்பூட்டாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/7&oldid=1542191" இலிருந்து மீள்விக்கப்பட்டது