பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஒளிவளர் விளக்கு

இயங்குகிருன் இறைவன் தான் ஆடி உலகை ஆட்டுகிருன். தன்னுடைய தெய்வக் கூத்தில்ை, படைப்பு, அளிப்பு, அழிப்பு, மறைப்பு, அருளுதல் என்னும் ஐந்தொழிற்கும் தானே இறைவன் என்பதை அவன் காட்டுகிருன்.

அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயை. (ஆடு அரங்கு - கடனம் ஆடும் இடம். வெளி வளர் - வெளிப் பட வளர்கின்ற ; வெளி - ஆகாசம் என்றும் கொள்ளலாம். உகந் தாயை மேற்கொண்ட கின்னே..)

ஆண்டவன் சிதாகாசத்தில் கடனம் செய்பவன். அறிவே நிரம்பியுள்ள தனி வெளிப்பரப்பே சிதாகாசம். அங்கே அறியாமை யென்னும் தடை இல்லை. வெளி என் பது ஆகாசம். சிதம்பரம் ஆகாசத் தலம். வெளிப்பட வளரும் தெய்வக்கூத்து என்று சொல்வது ஒருவகை. அப் படியின்றி ஆகாசத்தில் நடைபெறும் தெய்வ கடனத்தை மேற்கொண்டவன் என்றும் சொல்லாம். எங்கும் பரவிய இறைவன் ஓரிடத்தில் தன் திருக்கோலத்தை அடையாள மாகக் காட்டி, தானே ஐந்தொழிற்கும் தலேவன் என்பதைப் புலப்படுத்தி யருளினன். அப்படிப் புலப்படுத்திய இடம் அம்பலம் , தில்லைச் சிற்றம்பலம்.

"ஒளிவளர் விளக்காகிய சித்துருவாகவும், உலப்பிலா ஒன்ருகிய சத் துருவாகவும், உணர்வு சூழ் கடந்தோர் உணர்வாகிய ஆனந்த மூர்த்தியாகவும், தெளிந்த பளிங்குக் குன்ருகவும், சித்தத்துள் இனிக்கின்ற தேகைவும், அன்பர் கள் உள்ளத்தில் பழுத்த ஆனந்தக் கனியாகவும் இருப் பவனே! அம்பலத்தில் தெய்வ நடம் செய்யும் பெருமானே! உன்னுடைய திருவடித் தொண்டைச் செய்யப் புகுந்த ஏழையேன் உன்னேப்பற்றி முற்றும் அறிந்திலேன். உன் புகழைச் சொல்ல நான் யார்? நான் எவ்வாறு சொல்ல