பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலா வந்த பெருமான் - 48

அல்லவா? எந்த மதத்தினராக இருந்தாலும் அந்தக் காட்சியைக் கண்டு இன்பத்தை அடைவார்கள். அப்படி யிருக்க, நம்முடைய ஆண்டவன் இப்படி எழுந்தருளினன்’ என்ற கினேவு சற்றே உள்ளத்தில் தோன்றுமானல், அப் போது மனம் உருகும். உருகாத மனத்தினர்களே அவர்கள் வீட்டை அண்டி, அவர்கள் வாசலில் கின்று "இதோ வந்தி ருக்கிறேன்' என்று காட்டி உருகும்படியாகச் செய்கின்ற பெருங்கருணையை ஆண்டவன் படைத் திருக்கிருன்.நையாத மனம் உடையவர்களே கைவிக்கும் பொருட்டுத் தெருவிலே உலா வருகின்ருன். அப்படி உலா வருவதனலே அவ லுக்குப் புதிய பெருமை எதுவும் உண்டாவதில்லை. அவ னுடைய பெருமையை மற்றவர்கள் உணர்ந்து போற்ற வேண்டும் என்பதும் இல்லே. ஆனல் அவனுடைய அழகிலே ஈடுபட்டு, அவனுடைய திருவருளே நன்கு கினேந்து உருகி ல்ை அப்படி உருகுகிறவர்களுக்கு மனத்தில் அமைதி உண் டாகிறது; இறைவன் அருளேப் பெற்று வாழும் வகை ஏற்படுகிறது. இந்த அமைதியைத் தாமாக முயன்று பெற மாட்டாத மக்களுக்கு, 'நானே தருவேன்' என்று சொல்லு வானப் போல அவன் திருவுலா வந்து, வீதிக்கு வீதி எழுங் தருளி, வீட்டுக்கு முன்னலே வந்து கிற்கிருன்.

ஒரு தலம். அந்தத் தலத்தில் பூசை முதலியன கன்கு கடக்கின்றன. ஆல்ை அந்தப் பெண்மணி கோயிலுக்குப் போனதே இல்லை. கோயிலிலே எழுந்தருளியிருக்கின்றவன் பேரழகன் என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிருள். நேரே போய்ப் பார்த்ததில்லை. பார்த்திருந்தால் அல்லவா அவள் மனம் உருகும்? -

அவள் தன்னுடைய வீட்டிலே இருக்கிருள். எம் பெருமான் அவளே ஆட்கொள்ள விரும்பின்ை. அவன் திரு வுலாக்கொண்டு எழுந்தருளினன். மூவுலகத்திலும் விஞ்சிய