பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ஒளிவளர் விளக்கு

கருவூர்த் தேவர் இந்த கிலேயில் இருந்து பாடுகிரு.ர். 'கான் கடுமையாகிய இருவினை அலை வீசும் பாசக் கடலைக் கடந்துவிட்டேன். ஐம்பொறிகளாகிய கள் வரை ஒட்டி விட்டேன். இறைவனே, உன்னுடைய திருவடியிரண்டை யும் எப்படி அடைய வேண்டுமோ, அப்படி அடைந்து விட்டேன். இனிமேல் நீ அருள் செய்; அன்றி அருள் செய்யாமற் போ. அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை' என்று பாடுகிரு.ர். r கடுவினைப் பாசக் கடல்கடந்து ஐவர்

கள்ளரை மெள்ளவே துரந்து உன் அடியினே இரண்டும் அட்ையுமாறு அடைந்தேன்:

அருள்செய்வாய், அருள்செயாது ஒழிவாய். (கடுமையான இருவினேகளோடு கூடிய பாசமாகிய கடலேக் கடந்து ஐந்து பொறிகளாகிய கள்வரை மெல்ல மெல்ல ஒட்டி உன்னுடைய திருவடிகள் இரண்டையும் அடையும் முறையில் அடைந்தேன்; இனி நீ அருள் செய்வாயானலும் அருள் செய் யாமல் இருந்தாலும் அதைப்பற்றி நான் கவலையுறவில்லே. ஐவர் என்றது ஐம்பொறிகளே. துரங்து-ஒட்டி. அடியினே என்பது அடிகள் என்னும் துணையாய் கின்றது.)

இறைவன் கிச்சயமாக அருள்செய்வான் என்ற உறுதி யுடையவர் கருவூர்த் தேவர். இனிமேல் அருள் செய்வது அவன் கடமை; அதைப் பற்றி காம் கவலைப்படவேண்டிய தில்லை என்னும் மன நிலையோடு பாடுகிருர்.

"தன்க டன்அடி யேனேயும் தாங்குதல்

என்க. டன்பணி செய்து கிடப்பதே” - என்று அப்பர் சுவாமிகளும் அருளினர். பொறிகளைக் கள்வர் என்று சொல்வது மரபு. என்றேனும் கல்லறிவு தோன்றிலுைம் அது தொழிற்படாமல் இருக்கும்படி இழுத்துக் குலப்பதல்ை அவ்வாறு கூறுவர்.