பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஒன்று புதிதாக அந்த ஊரில் தொடங்கியிருந்ததால், அந்த சிறிய ஊர் குட்டி நகரத்தைப் போல விரிவடையலாயிற்று. பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கெல்லாம் நாகரிகம் கற்றுத் தரும் நகரமாகவும் அது மாறியிருந்தது.

அந்த பேரூருக்குப் போனால், எந்தவித சிரமமுமின்றி, வைரக்கற்களை விற்று விடலாம் என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக, நடேசன் ஓட்டமும் நடையுமாகப் போய்க் கொண்டிருந்தார்.

இருட்டானது உலகத்தை இப்பொழுது நன்றாகப் பிடித்துக்கொண்டு விட்டது. விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னிக் கொண்டிருந்தன.

வாழவந்தபுரத்திலிருந்து அந்தப் பேரூருக்குப் போகவேண்டும் என்றால், வேறு பெரிய பாதைகளோ, ரோடுகளோ எதுவும் கிடையாது. கரும்பு விளைந்திருக்கும் வயல்களின் வரப்புகள் மீதுதான் நடந்து போக வேண்டும்.

கரும்பு வயல்கள் என்பதைவிட, கரும்புக் காடு என்பதுதான் பொருத்தமாக இருக்கும். புதிதாக வயல்களில் கரும்பு பயிரிடப்பட்டு இருந்ததால், மண் வளம் அதிகமாக இருக்கவே, எதிர்பார்த்த அளவுக்குமேல் கரும்பு உயரமாக வளர்ந்து,