பக்கம்:கண்ணகி தேவி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

கண்ணகி தேவி

தூரம் போய், ஒரு குளிர்ந்த சோலையை அடைந்தனர். அவ்வளைவிலே கன்ணகி தேவி, நடையினால் மிகம் தளர்ந்து, "மதுரை மூதுர் யாது?" என வினவினாள். அது கேட்டுக் கண்ணகியின் தளர்ச்சிக்குத் துன்பம் கொண்ட கோவலன், வருத்தத்தை மறைப்பதற்கு நகை காட்டி, "தமது நாட்டிக்கு அவ்வூர் ஆறைந்து காதத்தில் உள்ளது. இனி அணித்தே," என்று இரு பொருள் படம் சொன்னான்.

கோவலனும் கண்ணகியும் சிறிதுநேரம் இளைப்பாறிய பின்னர்ப் பக்கத்திலுள்ள தவப்பள்ளியிலிருந்த கவுந்தி என்னும் பெயருடைய ஒரு முதிர்ந்த சைன சந்நியாசினியைக் கண்டு, அடிதொழுதனர். ஆம் முதியவனாகிய கவுந்தி, இருவரையும் நோக்கி, "நீங்கள் சிறந்த அழகும், நற்குடிப்பிறப்பும், நல்லொழுக்கமும் உடையவர்களாய்க் காணப்படுகின்றீர்கள். நீங்கள் தீவினையாளரைப்போல் உங்கள் இருப்பிடம் விட்டுப் பெயர்ந்து, இங்கு வந்த காரணம் யாதோ?" என்று கேட்டாள். அதற்குக் கோவலன், "சுவாமி, நான் மதுரைமாநகரம் சென்று, நியாய வழியில் பொருள் தேட விரும்பினேன் ; இதுவே இங்கு வருதற்குக் காரணம்," என்று சொன்னான்.

கவுந்தியடிகள் அதனைக் கேட்டு, "நன்று? இப்போது செல்லுதற்கிருக்கும் : வழியோ காடுகளை இடை இடையே கொண்ட நாடு. வழியில் பருக்கைக் கற்கள் படர்ந்து கிடக்கும். இவளது அனிச்சமலரினும் மெல்லிய அடிகள் அவற்றில் எவ்விதம் நடக்கப் பொறுக்கும்? என் செய்வது? ஊழின் வலியை வெல்வார் யார்? யான் பெரியோர்களிடம் அறவுரை (திருமோபதேசம்) கேட்பதற்கு மதுரை செல்ல எண்ணியிருக்கிறேன் ; ஆதலின், நானும் உங்களுடன் வருகின்றேன், வாருங்கள்," என்றாள். அது கேட்டுக் கோவலன், கண்ணகியின் வருத்தமாற்றுதற்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/22&oldid=1410818" இலிருந்து மீள்விக்கப்பட்டது