பக்கம்:கண்ணகி தேவி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

51

சிறிது தூரம் செல்வான் ; இயங்கலும் இயங்குவாள்; மயங்கலும் மயங்குவாள். இத்தகைய வீரபத்தினிக்கு முன், தீயின் வெம்மை ஆற்றாத மதுராபதி என்னும் மதுரைநகர்த் தேவதை தோன்றினாள். அவன், கண்ணகியின் உக்கிரத்துக்கு அஞ்சிப்பின்புறத்தில் நின்று, "அங்காய், என் குறையைக் கூறுகின்றேன்; கேட்டருள்,” என்றாள். அது கேட்ட கண்ணகி, தன்னுடைய வாடிய முகத்தை வலப்பக்கமாக வளைத்து, 'என் பின் நிற்போய், நீ யார் ? என் துன்பம் இன்ன தென அறிதியோ?' என்று கேட்டாள். அதற்கு அத் தெய்வம் கூறுவதாயிற்று:

"பெண்ணே, நான் மதுராபதித்தெய்வம்; உன் துன்பத்துக்குக் காரணத்தை அறிவேன் அதனைக் கேட்பாயாக. உன் கணவன் உற்ற துயருக்கு நான் மிக வருந்துகின்றேன் ! நான் இதுகாறும் இந்நகரில் அந்தணரது அருமறை ஒசையல்லது, ஆராய்ச்சிமணி இசையைக் கேட்டறியேன் ; இப்பாண்டியன், பகைவர் பழி துாற்றுவதல்லது குடிகள் பழி துாற்றியறியான். அறிவு மயங்கிய காலத்தும் பாண்டியர்களில் ஒழுக்கக்தவறி நடந்தவர் இல்லை. இவற்றிற்குப் பொற்கைப்பாண்டியன் சரிதையே போதிய சான்றாகும்: அதனைக் கேள் :

"முன்பு இந்நகரில் கீரந்தை என்னும் அந்தணன் ஒருவன் இருந்தான். அவன் ஒருநாள் காசியாத்திரை போவதற்குப் புறப்பட்டான். அப்போது அவன் மனைவி, பாதுகாப்பில்லாத தன் மனையில் தனித்திருப்பதற்கு அஞ்சினாள்.அந்தணன், பெண்ணே, நீ அஞ்ச வேண்டா. நமது அரசன் செங்கோல் கோடாத வேந்தன் ; ஆதலால், உனக்கு ஒரு தீங்கும் வாராது. உன்னை அரச வேலியே காக்கும்.” என்று தேற்றிப் புறப்பட்டுப் போனன். நகர் பரிசோதனைக்கு வந்த பாண்டியராஜன், அந்தணன் இவ்வாறு சொல்லிப் போனதை அறிந்தானாதலால், ஒவ்வொரு நாள் இர-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/59&oldid=1410870" இலிருந்து மீள்விக்கப்பட்டது