பக்கம்:கண்ணகிக் கதை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கண்ணகி கதை 55

பாங்கான நிழலிலே நின்றாள். அவளைக் கண்ட மலைவாழ் வேடர்கள்,

          பாட்டு

ஒருமார்பு இழந்த திருமா பத்தினியே பெருமைகொள் நின்னுடைய பெற்றியைக் கூறிடுவாய் இங்ஙனம் கேட்ட இயல்வேடர் தங்கட்கு மங்கையாம் கண்ணகி மறுமொழிகூறியிட்டாள் மணமிக்க மதுரை மன்னவன் பாண்டியனும் கணப்பொழுதில் அழியக்கடுஞ்சினம்கொண்டிட்டேன் பழவினை வந்திங்கு பற்றிய காரணத்தால் கொழுநனை இழந்தேன் கொடுவினையாட்டின் என்று மறுமொழிகூறி நின்றிட்ட வேளையினில் துன்றுபுகழ் வானவர்கள் தோன்றி மலர் சொரிந்தார் கோவலனைக்காட்டிக் கூடவழைத்துச் சென்றார் மேவிய காட்சியிதை வேடுவர் கண்டார்கள் பெண்ணிவள் நம்குலத்துப்பெருந் தெய்வமாகிடுவாள் நண்ணி இவள் பொருட்டு நற்குரவை யாடிடுவோம் என்று குரவைக் கூத்து இன்பமாய் ஆடினார்கள் நன்று பல வாத்தியங்கள் நின்று முழக்கினார்கள் குரவையுள்குமர வேளைக்குறித்துப்பாடினார்கள் திரமுடைய வேலதனைச் சிறப்பித்து பாடினார்கள் வேடுவர் தாம்கண்ட தேடரிய காட்சியினை நாடுபுகழ் மன்னன் நற்சேரன் அறிந்திடவே செங்குட்டுவனான சேரன் தெரிந்திட வேதங்கும் மலைப் பொருளைத் தாங்கிப் புறப்பட்டார்மலைவளம்காணுதற்கு மன்னனும் வந்திருந்தான் அலைமிகு பேராற்றின் கரையில் அமர்ந்திருந்தான் சேரன் திருமுன் சேர்ந்திட்ட வேடுவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/54&oldid=1301394" இலிருந்து மீள்விக்கப்பட்டது