பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லை கடந்த இன்பம் திருவடியில் தூங்கப் பழகிக் கொண்டால் அந்தத் தூக்கத்தில் இடம் மறந்து போகும்; காலம் மறந்து போகும். காலமும் இடமும் கடந்த இன்பம் ஆயிரம் மைல் கடந்து ஒருவன் ரெயில் வண்டியில் செல்ல வேண்டும். அவன் தக்கபடி டிக்கெட் வாங்காமல் இருந்தால் ஒவ்வொரு கணமும் டிக்கெட் பரிசோதகர் வந்து விடுவாரே என்று அஞ்சிப் பயந்து கொண்டிருப்பான். மூன்றாம் வகுப்பு டிக்கெட் வாங்கிக் கொண்டவனோ வண்டியில் உள்ள நெருக்க மும், மூட்டைப் பூச்சியும் துன்புறுத்த உறக்கமும் கெட்டு, வழி யெல்லாம் வெப்பத்தினாலும், குளிர்ச்சியினாலும் துன்புறுவான். ஆனால் முதல் வகுப்பு டிக்கெட் வாங்கிக் கொண்டவனுக்கு வண்டியில் ஏறிப் படுத்தது தெரியும். விடியற்காலையில் சிற்றுண்டி கொண்டுவந்து ஒருவன் எழுப்பும்போது வீட்டில் படுத்துத் தூங்கி எழுவானைப் போல எழுவான். அவன் 500 மைல் கடந்து வந்திருக்கிறான். பன்னிரண்டு மணி நேரம் சென்றிருக்கிறது. ஆனால் அவன் ஏறிக் கொண்ட வண்டியின் வசதியினாலும் நன்றாகக் தூங்குவதற்குரிய உடல்நிலை இருப்பதனாலும் அவன் பன்னிரண்டு மணி நேரத்தையும் மறந்தான்; ஐந்நூறு மைல் தூரத்தையும் மறந்தான். காலம், இடம் என்பன மற்றவர்கள் கண்ணுக்கும், கருத்துக்கும் முன்னே நின்று துன்பத்தையும் இன்பத்தையும் உண்டாக்கவும் அவ்விரண்டும் இவன் அளவில் நின்றுவிட்டன. இவன் அவற்றை உணரவில்லை. அவ்வாறே இறைவனுடைய பாதாரவிந்தங்களிலே நம்முடைய உள்ளத்தைச் செலுத்தி, அதனை அங்கே தூங்கச் செய்துவிட்டால் காலதேச பரிச்சின்னத்திற்கு அப்பாற்பட்ட ஒர் இன்பம் நமக்கு வரும். நன்றாக அயர்ந்து தூங்குவானுக்கு இன்ன இடத்தில் தூங்கு கிறோம் என்ற இடவேறுபாடோ, இத்தனை காலம் தூங்கினோம் என்ற கால அளவோ தெரிவது இல்லை. தூக்கத்திற்குச் சுகம் இல்லையென்று சொல்வார்கள். தூக்கம் வராதவர்களுக்கு மெத்தை வேண்டும்; விசிறி வேண்டும்; தலையணை வேண்டும்; கால் பிடிக்க வேண்டும். நன்றாக உடலால் உழைத்து இளைப் புற்ற தொழிலாளர்களுக்கு, கையே தலையணையாக, கட்டாந் தரையே படுக்கையாக வைத்துப் படுத்தாலும் கண்ணை மூடின. 9i