பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தி வாள் செய்து விவகாரம் பண்ணுவது இந்த நாளிலும் அதிகமாக இருக்கிறது. - யமன் என்னும் கற்பனை உலகத்தில் மரணம் என்பது இந்த ஊர்க்காரனுக்குத்தான் வரும், இன்ன சாதிக்காரனுக்குத்தான் வரும் என்ற வரையறை கிடையாது. உடம்பு எடுத்த எல்லா உயிர்க்கும், உடம்பைப் போக்குகின்ற மரணம் வருவது இயற்கையே. எல்லோருக்கும் மரணம் ஒன்றாக வரும்போது இந்து மதத்தில் உள்ளவர்களுக்கு மாத்திரம் இந்தமரணத்தை உண்டாக்க யமன் வருகிறான் என்றால் மற்ற மதத்தினர்களுக்கு யார் யார் வருகிறார்கள்? அவர்களுக்கு வெவ்வேறு ஆசாமி வருவானா? மற்ற மதத்தினர்கள் யமனைப் பற்றிச் சொல்வது இல்லை. ஆகையால் அவர்களுக்கு மரணம் இல்லையா? மரண தேவன் யமனானால் யமன் இல்லாத மக்களுக்கு மரணம் இல்லையென்று சொல்ல முடியுமா? இப்படியெல்லாம் பல கேள்விகள் எழலாம். மரணம் வரும் என்பதை நினைப்பூட்டுவதற்கு யமன் என்ற ஒரு கற்பனை செய்திருக்கிறார்கள். அந்தக் கற்பனை இடத்திற்குத் தக்கபடி வேறுபடும். மற்ற நாடுகளிலும் மரண தேவதை என்று ஒன்றைச் சொல்வார்கள். இப்போதும் மரணத்தை எலும்பு உருவத்தில் குறிக்கிற வழக்கம் கலைஞர்களிடம் இருக்கிறது. யமன் என்பது ஒர் அடையாளம். காலன் என்ற சொல் நம் இறுதிக் காலத்தை அறிந்து வரு கிறவன் என்ற பொருளை உடையது. அவன் எருமைக் கடாவின் மேல் வருகிறான். எதற்கும் அஞ்சாதது எருமைக்கடா. அவனும் யாருக்கும் அஞ்சாதவன். மரணத்தை யாராலும் மாற்ற முடியாது என்ற கருத்தை இப்படியெல்லாம் கற்பனை பண்ணியிருக்கிறார்கள். எவ்வளவு ஆற்றல் உடையவனாக இருந்தாலும், கல்வி உடைய வனாக இருந்தாலும், பொருள் உடையவனாக இருந்தாலும் மரணத்தினின்றும் தப்புவது அரியது. மரணம் எதற்கும் அஞ்சி நில்லாது என்ற கருத்தையே இவ்வாறு சொல்கிறார்கள். பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்தில் உள்ள ரோடுகளில் ஒரு துணை நட்டு அதன்மேல் ஒரு தகட்டை அடித்திருப்பார்கள். 1C 1