பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தி வாள் சத்திவாள் தந்தான். அந்த வாளை என் கையில் கொண்ட வுடனேயே மயக்கமும், பயமும் போய்விட்டன. காலன் வந்தால் இனிப் பயம் இல்லையென்ற உறுதிப்பாடு எனக்கு வந்துவிட்டது” என்கிறார். முன் கொடுத்த வாள் இப்படிக் கொடுத்த பெருமான் முன்னாலேயே ஒரு வாளை ஒருவருக்குக் கொடுத்திருக்கிறான். மிகச் சிறந்த ஒருவருக்கு அந்த வாள் பயன்பட்டிருக்கிறது. வேறு யாருக்கும் கொடுக்காத வாள் அது; ஒப்பற்ற ஞான வாள். ஞானவாளாகிய ஓங்காரப் பொருளைத் தன்னுடைய தந்தைக்குக் கொடுத்தவன் முருகப் பெருமான். அந்த வாளைச் சிவபெருமான் வைத்திருக்கிறான். அத்தகைய பெருமான் எனக்கு இப்போது ஒரு வாள் தந்தான் என்று பேசுகின்றார் அருணகிரியார். தந்தைக்கு முன்னம் தனிஞான வாள்.ஒன்று சாதித்தருள் கந்தச் சுவாமி. 'இது என்ன வேடிக்கையாக இருக்கிறது. தன்னுடைய தகப்பனுக்கு ஞான வாளைத் தந்தான் முருகன் என்றால், அதற்கு முன்பு சிவபெருமானிடத்தில் அஞ்ஞானம் இருந்ததா?' என்ற கேள்வி வரும். தானம் பண்ணுகிறவர்கள் இல்லாதவனுக்கும் கொடுப்பது உண்டு; இருப்பவனுக்கும் கொடுப்பது உண்டு. சோம வார அமாவாசை என்று அரச மரத்தைப் பிரதட்சிணம் செய்வார்கள். ஆயிரத்தெட்டுப் பிரதட்சிணம் பண்ணுவதற்கு ஒரு கணக்கு வேண்டும் அல்லவா? அதற்கு அவரவர்களுடைய செல்வநிலைக்கு ஏற்றபடி பலபல பொருள்களைப் போடுவார் கள். மிளகு போடுவாரும், திராட்சைப் பழம் போடுவாரும். கண்ணாடியும் குங்குமச்சிமிழும் போடுவாரும் உண்டு. சில பேர் லட்டு போடுவார்கள்; முறுக்கு போடுவார்கள். விலை உயர்ந்த பண்டங்களைச் சிறந்த செல்வர்கள் போடுவார்கள். அப்படிப் போட்ட பொருள்களைப் பிறகு அருகில் உள்ள ஏழைகளுக்கும், குழந்தைகளுக்கும் விநியோகிப்பது வழக்கம். கொடுப்பதற்கு முன் அங்கே யார் மிகப் பெரியவர்களாக இருக்கிறார்களோ அவர் களுக்குக் கொடுப்பார்கள். அவருக்கு அந்தப் பொருள் வேண்டும் என்பது அல்ல. நாம் கொடுக்கும்போது நல்லவருக்குக் கொடுக்க 1O9