பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 கொண்டது. ஆகவே குமரகுருபரனாக எண்ணும்போது அவன் மகிமையும், வள்ளி மணாளனாக எண்ணும்போது அவன் கருணையும் நமக்குப் புலனாகின்றன. எவன் எல்லா வல்லமை யும் உடையவனோ, யார் எல்லாக் காரியங்களையும் செய் பவனோ அவன் கருணையும் உடையவன் என்று நினைக்கும் போது அவன்பால் வியப்பும் மதிப்பும், அவன் நமக்கும் அருள் செய்வான் என்ற நம்பிக்கையும் இணைந்து நம்முடைய பெரும் பயத்தைப் போக்கத் துணையாக நிற்கின்றன. சிறியவன் இரக்கம் உடையவனாக இருந்தால் அவனிடத்தில் இருந்து சிறிய உதவியைத்தான் பெறலாம். பணத்தினால் மிகவும் பெரியவனாக இருப்பவன் இரக்கம் இல்லாதவனாக இருந்தால் அவனிடத்திலிருந்து எதுவும் பெறமுடியாது. இரக்கம் இல்லாத வன் மிகப் பெரிய பணக்காரனாக இருந்தாலும், இரக்கம் உள்ளவன் மிகச் சிறியவனாக இருந்தாலும் பயன் இல்லை. 'அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும் செல்வச் செவிலியால் உண்டு” என்று வள்ளுவர் கூறுவார். இரக்கம் என்பது அன்பிலிருந்து விளைவது. அந்த இரக்கம் நன்றாகப் பயன்பட வேண்டுமானால் பொருள் என்ற செவிலி இருக்கவேண்டுமாம். எத்தனையோ நல்லவர்களுக்கு இரக்கம் இருக்கிறது. ஆனால் பிறருக்கு உதவி செய்கின்ற தகுதி அவர்களுக்கு இருப்பது இல்லை. ஏழைகளை எல்லாம் காப்பாற்ற வேண்டும் என்று ஒரு நல்லவர் நினைக் கிறார். அத்தனை பேருக்கும் கொடுக்கப் பணம் அவரிடம் இருப்பது இல்லை. பெரிய பணக்காரர்களுக்குப் பணத்தை மேலும் மேலும் சேர்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறதே யொழியப் பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்ற இரக்கம் இருப்பது இல்லை. வேறு யாருக்கும் இல்லாத செல்வமும், பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்ற இரக்கமும் ஒரே இடத்தில் இருந்தால் அவரால் உலகம் எல்லாம் இன்பத்தை அடையும். அத்தகையவன்தான் முருகன். அவன் தன் தந்தைக்கே ஞான வாளைச் சாதித்தான். அருணகிரிநாதர் முருகனுடைய பெருமையை நினைக்கும்போது அவன் குருநாதனாக இருந்தான் என்பதைத்தான் நினைப்பார். பதினாறாயிரம் திருப்புகழ் பாடிய அவர் முதல் திருப்புகழின் ஆரம்பத்தில் அதனை நினைக்கிறார் 112