பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 யின் திருவருளால் பிரிக்கும் சக்தியினின்றும் பிரிந்து, ஒன்றும் சக்தியோடு ஒன்றுபடலாம். இதற்குக் காரணமாக இருப்பது இறைவனுடைய சக்தி வாள். "சக்தி வாள் என்னுடைய கையில் வந்த பிறகு காலன் என்னைக் கண்டாலே வெம்புவான். ' வெம்புவதாவது கோபம் கொள்ளுதல். 'என்னுடைய மிடுக்கை யும், துடிப்பையும் கண்டு, இந்தப் பயல் மாத்திரம் நம்மிடம் அச்சம் இல்லாமல் இருக்கிறானே என்று கோபித்துக் கொள் வான். அவன் கோபம் இல்லாமல் சும்மா வந்தாலேயே குலை நடுங்கும். கோபத்தோடு வந்துவிட்டால் எப்படி இருக்கும்! அவன் வந்தாலும் நான் பயப்படமாட்டேன்' என்று துணிவாகச் சொல்கிறார். காலன்வெம்பி வந்து இப்பொழுது என்னை என்செய்யலாம்? வெம்பும் காலன் முன்னாலேயே மார்க்கண்டேயன் ஆண்டவனை நம்பிப் போன போது நம் பாசத்திற்கு அகப்படாமல் போகிறானே என்று காலன் வெம்பினான்; கோபம் கொண்டான்; இறைவனிடத்தில் உதைப்பட்டான். அவனுக்கு இன்னும் புத்தி வரவில்லை. அந்த யமன் இப்போது வந்தால் அவன் சூலத்தை நானே வெட்டு வேன்' என்று அருணகிரிநாதர் சொல்கிறார். மார்க்கண்டேயனைத் தொடர்ந்த காலன் மார்க்கண்டே யனால் உதைபடவில்லை. அவன் யாரை நாடிச் சேர்ந்தானோ அந்தப் பெருமான் காலனை உதைத்தான். 'முன் முளைத்த காதைவிடப் பின் முளைத்த கொம்புக்கு வலிவு அதிகம்' என்று சொல்வார்கள். அப்படி அருணகிரியார் பேசுகிறார். 'என்னிடத் தில் யமன் வந்தால் நான் பரமேசுவரனுக்காகக் காத்துக் கொண் டிருக்கமாட்டேன். அவனுக்கு ஞான வாள் தந்த கந்த சுவாமியைக் கூப்பிட மாட்டேன். முளையை வெட்டுவதற்குக் கோடரி எதற்கு? எம்பெருமான் என் கையில் தந்திருக்கிற சக்திவாள் ஒன்றே போதும்; கிாலனை ஒட்டுவேன்' என்று அருணகிரியார் கூறுகிறார். சக்தி வாள் ஒன்றினால் சிந்தத் துணிப்பன் தணிப்பரும் கோப த்ரிசூலத்தையே. 116