பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 துக்குப் புறம்பாகத் தோன்றின் அவற்றை அமைத்துக் கொள்ள வழி தேடவேண்டும். இலக்கண நூல்களில் இவற்றையெல்லாம் அமைத்துக்கொள்ள வழிதுறைகள் உண்டு. அருணகிரியார் வாக்கில் உயிராக நிற்பது அவருடைய இறையருள் அநுபவம். அதனை உணரும்போதுதான் அவருடைய ஈடில்லாப் பெருமை புலனாகிறது. அவருடைய மிடுக்குகள் சந்தப் புலமையும், விரிவான வருணனைச் சிறப்பும், முருகனைப் பாடி மகிழும் பக்தி உயரமும் பலகாலும் அறிந்து இன்புறுதற் குரியனவே எனினும், அவர் தம்முடைய அநுபூதியை வெளியிடும் இடங்கள் மிகமிக நுட்பமானவை; அரியவை. கந்தர் அலங்கார விரிவுரையில் பல இடங்களில் இந்த உண்மையை உணரும் வாய்ப்புக் கிடைத்தது. முருகனுடைய பெருங்கருணையை அறிவுறுத்தும் பாடல்களும், அநுபவக் குறிப்பையுடைய பாடல்களும் அப்பெருமான்பால் மேலும் மேலும் பக்தி செய்து அவனருளைப் பெற வேண்டும் என்று ஆவலை உண்டாக்குகின்றன. இந்த விரிவுரைகளில் ஒரு முக்கியமான கருத்தை வற்புறுத்த வேண்டும் என்பது அடியேனுடைய விருப்பம். அருளாளராகிய அருணகிரிநாதருடைய திருப்பாடல்களைப பலகாலும் படித்து இன்புறுவதும் பொருள் தெரிந்து உளங்கனிவதும் அவசியமான காரியங்களே. அவற்றிற்கு அப்பால், நாம் நம் வாழ்க்கையில் இத்துறையில் சிறிய அளவாவது அநுபவத்தைப் பெற வேண்டும் என்ற கிளர்ச்சி எழவேண்டும். எல்லோரையும் போலப் பொழுதைக் கழிப்பதும், உண்பது உறங்குவது தொழில் புரிவது பான்ற வேலைகளில் யந்திரம் போல ஈடுபடுவதும் ஆன்ம பிளக்கத்தைத் தருவதில்லை. கடவுளைத் தொழுவதும் பாரா யணம் பண்ணுவதும் வெறும் சடங்குகளாக, சம்பிரதாயங்களாக இருந்தால் மேலே சொன்ன செயல்களோடு சேர்க்கும்படி ஆகிவிடும். சட்டையை அழுக்கின்றி வைப்பது வேறு; உடம்பை அழுக்கின்றி வைப்பது வேறு உள்ளத்தைக் கிளுகிளுக்கச் செய்வது வேறு; உயிரினுடே அநுபவம் உறைப்பது வேறு. நாம் உடம்புக்கும் உள்ளத்துக்கும் வேண்டியவற்றையே செய்து 122