பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிக்குத் துணை இவை தூண்டுகோல். ஒருவகையில் இவற்றை நோய் என்று சொல்லலாம். இந்த இரண்டு வினைகளையும் அகற்றிவிட்டால் நம் யாத்திரை நின்றுவிடும். இருவினை ஒப்பு வந்தபோது மல பரிபாகம் வரும். பின்பு இறைவன் அருள் பதியும். அதைச் சத்திநிபாதம் என்று சொல்வார்கள். அதன் பிறகு ஞானம் பெற்று முத்தி அடையலாம். இப்போது நமக்குச் சத்துருவாக இருந்து வருவன இரண்டு வினைகள். 'ஏழையின் இரட்டைவினை ஆயதோர் உடற்சிறை." இந்த உடம்பாகிய சிறைக்குள் வாழும் வாழ்வு அந்த இரண்டு வினைகளால் வந்தது. வினை நின்றவுடன் பிறவியும் நின்று போகும். வினையைப் போக்கிக் கொள்ள முயற்சி செய்யாது நாம் மேலும் மேலும் வினைகளைச் செய்து கொண்டிருக் கிறோம். பல காலமாகச் செய்த சஞ்சித வினை குவிந்திருக்கிறது. பிராரப்த வினை இந்தப் பிறவியோடு வர, இப்போது செய்கின்ற ஆகாம்யவினை பின்பும் நமது பழைய மூட்டையை அதிகமாக்கு கிறது. இதனால் வினையே இல்லாத காலம் எப்போதும் வருவது இல்லை. இப்படியே போய்க் கொண்டிருந்தால் எந்தக் காலத்தில் வாழ்க்கைப் பயணம் முற்றுப் பெறும்? வாழ்க்கையில் துணை அப்படியாவது இந்தப் பயணத்தில் இன்பம் இருக்கிறதா என்றால், ஓயாத தொல்லையும், ஒழியாத துன்பமுமே வாழ்க்கை யின் பயனாக இருக்கின்றன. 'பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்" என்று பேசுவர் பெருமக்கள். இந்த வாழ்க்கையில் துணையாக நாம் யார் யாரை நம்பிக் கொண்டிருக்கிறோமா அவர்கள் எல்லாம் இட எல்லை, கால எல்லை ஆகியவற்றுக்கு உட்பட்டவர்கள். இங்குள்ள ஒன்றுமே உண்மையில் உயிருக்குத் துணையாக வருவது இல்லை. நமக்கு மேலும் பிறவியைத் தருவதற்குக் காரணமாக இருக்கும் வாழ்க்கையை மாற்றி, துன்பத்தை அடி யோடு அழிப்பதற்குரிய வேறு பெரிய துணை வேண்டும். அந்தத் துணைகள் என்ன என்பதை இந்தப் பாட்டால் அருணகிரியார் சொல்ல ஆரம்பிக்கிறார். 3.31