பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிக்குத் துணை னுடைய திருவுருவம் மிகப் பெரிதாக இருந்தாலும் முக்கியமாக நம்முடைய கண்கள் அவனுடைய பாதத்தில் வண்டாக மொய்க்க வேண்டும். அப்போதுதான் நம் பார்வையில் உள்ள மாசு தீரும். கண்களில் உள்ள தீங்கு அகலும். இறைவன் திருவுருவத்தைப் பயன்படுத்திக் கொள்வன நம்முடைய கண்களே. இந்திரியங் களுக்குள் சிறந்தனவாகிய கண்களுக்குரிய துணையாக ஆண்டவன் திருவடியைத் தாங்கியிருக்கிறான். விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள். வாக்கின் செயல் மற்றொரு கரணமாகிய வாக்கைத் தூய்மைப்படுத்த ஆண்டவன் ஒரு மருந்து வைத்திருக்கிறான். மனம் படைத்த மக்களுக்கு நாம ரூபம் இல்லாவிட்டால் ஒன்றையும் நினைக்க முடியாது. ஆகை யால் இயல்பாகத் தனக்குப் பெயரும் உருவமும் இல்லாவிட்டா லும் உயிர்களின்பால் உள்ள கருணையினால் அவற்றோடு அவன் எழுந்தருளுகிறான். அவன் திருவுருவத்தைக் கண்ணால் கண்டு கண்டு கண்களின் மாசைக் கழுவிக் கொள்ளலாம். பலபல பேசி நம் நாக்கை மாசுடையதாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். அதற்கு முறிவாக அவன் திருநாமத்தைச் சொல்ல வேண்டும். உலகில் உள்ள எண்பத்து நான்கு இலட்சம் யோனி பேதங்களுக்குள் மனிதன்தான் சிறந்தவன் என்று சொல்வார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவன் அறிவினால் சிறந்தவன் என்பது ஒன்று. மற்றொன்று, யாரும் பெறாத வாக்கு அவனிடம் அமைந் திருக்கிறது. மிகச் சிறந்த பொருள் ஒருவனிடத்தில் இருக்குமா னால் அதை நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் அறிவாளிக்கு அழகு. வாக்கு என்பது வேறு யாருக்கும் இல்லாமல் மனிதனுக்குக் கிடைத்திருக்கிறது. அதனை மிகச் சிறந்த பயனுடையதாக ஆக்க வேண்டும். பலவற்றைப் பேசிப் பேசி நாம் துன்புற்று வருகிறோம். 'யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்பர் வள்ளுவர். உரையைப் பெருக்கிப் பெருக்கி எண்ணங் களையும் பெருக்கிக் கொண்டிருக்கிறோம். க.சொ.V-10 135