பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 சிந்தித்துத் தியானம் செய்ய வேண்டும். கண்களினால் காணும் சிலா வடிவங்கள் போட்டோ படம் போன்றவைகளே. அந்த வடிவங்களைக் கண்களினால் கண்டு தியானித்தால் அவை மெல்லச் சோதிப் பிழம்பாகிய உருவமாக அகக் கண்ணில் தோன்றும். அதுதான் இறைவனுடைய நேர் வடிவம். அதனைக் காணும் பக்குவம் இல்லாமையினால் படத்தைப் பார்ப்பது போல விக் கிரகங்களைக் காண்கிறோம். ஆகவே, நாம் இப்போது காணும் விக்கிரகங்கள் அறிகுறி மாத்திரமானவை. நாமங்களோ அப்படி அல்ல. அவை எதனுடைய அடையாளமும் அல்ல. இறைவனுடைய திருப்பெயர்களே. இறைவனுடைய திரு உருவங்களை ஆலயங்களுக்குப் போய்ப் பார்க்கிறோம். அப்படிப் போய்ப் பார்க்க முடியாதவர்களுக்கு திருவிழாக்களில் ஆண்டவன் எழுந்தருளிக் காட்சி அளிக்கிறான். அப்படி வந்தும் இறைவனுடைய தேசோமய உருவத்தின் பிரதி நிதியாகிய அந்த விக்கிரகத்தை நாம் பயன்படுத்திக் கொள்வதில் எத்தனையோ சங்கடம் இருக்கிறது. வீதியில் இறைவன் எழுந் தருளினாலும் குருடன் பார்க்க முடியாது. இறைவன் திருநாமமோ அத்தகையது அன்று. எந்த இடத்திலும் எந்தக் காலத்திலும், யாரும் அதை நாவில் ஏற்றிக் கொள்ளலாம். அது இறைவனுடைய நாமத்தின் அடையாளம் அன்று; அவன் நாமமே. ஆகவே, இறைவனுடைய அர்ச்சா வடிவங்களைக் காட்டிலும் அவன் திருநாமங்கள் பல மடங்கு சிறந்தன. எந்த இடத்திலும், எந்த நிலையிலும், எந்தக் காலத்திலும், யாரும் அவனுடைய திரு நாமத்தைச் சொல்லலாம். வீதியில் அவன் எழுந்தருளும் போது வெளியில் வந்து பார்க்க முடியாத நொண்டி அந்தப் பெரு மானுடைய வடிவத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. நாமம் அத்தகையது அன்று. நோயாளியும் சொல்லலாம்; பேசத் தெரிந்த குழந்தையும் சொல்லலாம். அழுக்காக இருக்கிறபோதும் சொல்லலாம்; அழகாக இருக்கிற போதும் சொல்லலாம். மூச்சு இருக்கும் மட்டும் அவன் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். அதனால் இறைவன் உருவத்தைக் காட்டிலும் நாமத்துக்குப் பெருமை அதிகம். முருகப் பெருமானுடைய திருநாமங்கள் பலவாக இருந் தாலும் அவற்றுள் எல்லாம் மிகமிகச் சிறந்தது முருகன் என்னும் 士38