பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 “முருகா எனஓர் தரம்ஒ தடியார் முடிமே லிருதாள் புனைவோனே" என்பது திருப்புகழ். ஒருதரம் முருகா என்று சொன்னாலும் அவன் திருவடிகள் தலையின்மீது படியும் என்று சொல்கிறார். அங்கே ஒரு முறை சொல்வது என்பது முக்கியம் அல்ல. அதைச் சொல்வோன் தகுதிதான் முக்கியம். இறைவனிடத்தில் ஆராத காதலுடன், அந்தத் திருநாமத்தை நாக்குத் தித்திக்கப் பலமுறை சொன்னால் நிச்சயமாகப் பயன் உண்டாகும். 'அஞ்சு முகம்தோன்றின் ஆறு முகம்தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல்என வேல்தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாஎன்று ஒதுவார் முன்” என்று இந்த நாம பாராயணத்தின் சிறப்பைத் திருமுருகாற்றுப் படையின் பயனாக உள்ள வெண்பா ஒன்று கூறுகிறது. மனத் திலுள்ள அச்சத்தை ஒழித்து, நல்ல காட்சிகளைக் காணச் செய்து, உலகத்திலுள்ள போராட்டத்தில் வெற்றி வாங்கித் தந்து, எம் பெருமான் திருவருளைக் கூட்டி வைப்பது முருகா என்னும் திரு நாமம். அந்த நாமத்தின் பெருமையை நக்கீரரும் அருணகிரி நாதப் பெருமானும் ஏனைய பக்தர்களும் பலபடியாகப் பாராட்டிப் போற்றியிருக்கிறார்கள். நிகழ்காலத் துணை இந்த வாழ்வில் நம்முடைய வினைகள் போக வேண்டு மானால் அதற்குத் துணையாக இரண்டு சொன்னார். கண்ணுக்குத் துணை இறைவன் திருப்பாதங்கள். வாக்குக்குத் துணை அவன் நாமங்கள். நாம ரூப நாட்டம் உடைய மனத்திலே கண்ணாலே காணும் காட்சியும், வாக்கினாலே சொல்லும் நாமமும் படியும். அவனுடைய திருவடி மலர்களைக் கண்டு அன்பு செய்வார் 5ளுக்கு அந்த அடிமலர் உள்ளத்தில் நின்று என்றைக்கும் மாறாத துணையாக இருக்கும். அப்படியே அவனுடைய திருநாமம் அவனுடைய இயல்புகளையும், குணங்களையும், திருவுருவத்தை யும் நன்கு நினைப்பூட்டி உள்ளத்தில் தேனாறு பாலாறு பெருகச் செய்யும். இந்த இரண்டும் நிகழ்காலத்திற்குத் துணையாக இருப் 140