பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 முதலில் பழக வேண்டும். அதோடு அவனுடைய திருநாமம் ஆகிய முருகா என்பதை நாக்கில் வைத்துச் சொல்லிப் பழக வேண்டும். பின்பு அவனுடைய பன்னிரு தோள்களையும் கண்டு தியானித்துப் பழக வேண்டும். இறைவனுடைய திருவடியையும், திருத்தோளையும் சேர்ந்து பார்த்தால் இறைவனுடைய உருவம் முழுவதும் தெரியும். பின்பு அவன் திருக்கரத்தில் உள்ள வேலை யும், அவனுக்கு வாகனமாகிய மயிலையும் தியானம் பண்ணி னால் அவன் கோலம் முழுமையும் நன்றாகப் புலனாகும். பாதத்தைக் கண்டாருக்குப் பார்வையில் தூய்மையும், தோளை நினைத்தாருக்கு மனத்திலே தூய்மையும், வேலையும், மயூரத்தை யும் தியானித்தாருக்கு நெஞ்சில் உறுதியும் உண்டாகும். இதில் மூன்று காலத்தினுடைய வினைப் பயன்களையும் அந்தப் பயனை மாற்றிக் கொள்வதற்கு வழிகளையும் சொல்லி யிருக்கிறார் அருணகிரியார். நிகழ்காலத்தின் தீய விளைவு களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு விழிக்கும் மொழிக்கும் துணையாகத் திருவடியையும் முருகா என்னும் நாமங்களையும் சொன்னார். இறந்த காலத்தின் தீய விளைவு களுக்கு மாற்றாகப் பன்னிரு தோள்களின் தியானத்தைச் சொன் னார். வருங்காலத்தின் தீங்கை மாற்றுவதற்கு வேலையும் மயிலையும் துணையாகச் சொன்னார். வேலும் மயிலும் என்று சொல்வது ஒரு மந்திரம் போன்றது. இடும்பன் இந்த மந்திரத்தைச் சொல்லி இரண்டு மலைகளைத் தூக்கிக் கொண்டு வந்தான் என்று ஒரு பெரியவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். 'வேலும் மயிலும் துணை' என்பது பல அடியார்களின் திருநாக்கில் மந்திரம் போல உதவுகிறது. இந்த இரண்டையும் ஒரு சேரச் சொல்வதைப் பழங்கால நூல் ஆகிய பரிபாடலில் பார்க்கிறோம். w “விறல்வெய்யோன் ஊர்மயில் வேல்நிழல் நோக்கி" என்று சேர்ந்து வருகின்றன. "கிரணக்கலாபியும் வேலும் உண்டே' என்று முன்பும் ஒரு பாட்டில் அருணகிரியார் சொல்லியிருக் கிறார். i46