பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவயோகம் வீட்டுக்கு வந்தவுடன் வீடு பூட்டி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு எத்தனை ஆசாபங்கம் ஏற்படும்! அத்தகைய நிலை வரக்கூடாது என்று அருணகிரியார் சொல் கிறார். முயற்சிகள் எல்லாம் சரிவரச் செய்து, குரு நாதனுடைய கிருபையைத் தெரிந்து கொண்டு அந்த வகையில் நடக்கக் கூடிய வர்களுடைய முயற்சிதான் பயனைத் தரும். அதைச் சொல்ல வருகிறார். ஊர் தேடி வந்துவிட்டுத் தெருக் காணாமல் அலை கிறார்கள் பலர். அவர்களே யோகிகள். - துருத்தி எனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்து அருத்தி உடம்பை ஒறுக்கில்என் னாம்சிவ யோகம் என்னும் குருத்தை அறிந்து முகம்ஆறுடைக்குரு நாதன் சொன்ன கருத்தை மனத்தில் இருத்தும்கண் டீர்முத்தி கைகண்டதே. போலி யோகம் யோகிகளைப் பற்றி முன் இரண்டு அடிகளில் சொல்கிறார். அவர் ஏன் யோகத்தைத் தாக்கவேண்டும்? யோகம் நல்லது அல்லவா? முன்னாலே சொன்னது போலப் பணம் நல்லதுதான். ஆனால் அந்தப் பணத்தினால் தீங்கு அடைகிறவர்களைக் கண்டு பணமே தீங்குதான் என்று சொல்ல முடியாது. யோகம் நல்லது தான். ஆனால் யோகம் என்ற பெயரைச் சொல்லிக்கொண்டு பலர் தமக்குத் தீங்கு தேடிக்கொண்டு பிறருக்கும் தீங்கு செய்கிறார்கள். அதனால் யோகிகளைக் கண்டால் போலி யோகியா அல்லவா என்று மிக நாட்டத்தோடு பார்க்க வேண்டும். ஆழ்வார்களும், நாயன்மார்களும், அருணகிரியாரும் பலவிடங்களில் போலி யோகத்தைக் கண்டித்திருக்கிறார்கள். யோக மென்னும் படி யோகம் என்ற பொருளுக்கு ஒன்று கூடுதல் என்று பொருள்; இணைப்பு என்றும் பொருள். பல வகையாகச் சிதறுண்டு போகா மல் மனம் அடங்கி ஒடுங்கிவர வேண்டும். அதுதான் யோகம். 'யோகாத் சித்த வ்ருத்தி நிரோத:' என்று பதஞ்சலி யோக சூத்திரத்தில் முதலில் சொல்கிறார். மனம் ஒருமைப்பட்டு நிற்க, இறைவனோடு ஒன்றுபட வேண்டும். 153