பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 தத்துவங்கள் எல்லாவற்றுக்கும் முதலாக இருப்பது நாத தத்துவம். முடிவாகிய தத்துவமாக இருப்பது பூமியாகிய பிருதிவி, மொத்தம் முப்பத்தாறு தத்துவங்கள். இவற்றின் விரிவையே தொண்ணுற்றாறு தத்துவங்கள் என்றும் சொல்வார்கள். தோற்றத் தில் முதல் தத்துவமாக இருப்பது முடிவில் கடைசித் தத்துவமாக இருக்கிறது. ஒடுங்கும்போது கடைசியில் ஒடுங்குவது தோன்றும் போது முதலில் தோன்றும் தத்துவமாகும். தத்துவங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு நிற்கிற எம்பெருமான் தத்துவங்கள் எல்லாவற்றுக்கும் கடைசியாக இருக்கிற தத்துவமாகிய மண்ணைத் தன் தலைமீது சுமந்தான். இந்தத் திருவிளையாடலை நாம் கேட்டிருக்கிறோம். தன் அடியாரைக் காப்பதற்காக நாத தத்து வத்துக்கும் மூலமாக உள்ள சிவ தத்துவமாகிய இறைவன் கடைசித் தத்துவமாகிய பிருதிவியைத் தன் தலைமேல் வைத்துக் கொண்டான் என்றால் அவனுடைய பெருங் கருணைத்திறம் புலனாகிறது. இந்த இரண்டு தத்துவங்களுக்குமிடையே உள்ள தத்துவங்களும் இறைவனிடமிருந்து விரிந்தன என்பதை அது பவத்தில் காண வேண்டும். இறைவனாகிய பெருங்கடலில் தோற்றுகின்ற அலைகள் அவை. அலைகள் என்று பார்க்கும் போது கடலாகவே தோற்றுகின்றன. கடல் இல்லாமல் அலை இல்லை. ஆனால் அலை இல்லாமல் கடல் உண்டு. இறைவன் இல்லாமல் தத்துவங்கள் இல்லை. ஆனால் தத்துவங்கள் இல்லாமல் இறைவன் உண்டு. குமிழ் என்றும் நுரை என்றும் கழி என்றும் நீர் நிலை என்றும் சொல்கிற பகுதிகள் எல்லாமே கடலின் பல்வேறு நிலைகள். 'ஐந்து பூதமும், ஆறு சமயமும், மந்திர வேத புராண கலை களும், ஐம்பத்தொரு லிபிகளும், அண்ட சராசரமும், பிரம்மா முதலிய திருமூர்த்திகளும், ஆகாசம் சந்திரன் சூரியனும் ஆகிய எல்லாமே ஆண்டவனாகிய பெரிய கடலின் அலைகள் என்பதை உணர்ந்து நாமும் அந்தப் பெரிய தத்துவத்திலே கரைந்து நிற்கிற நிலைதான் சிவயோகம்' என்பது அருணகிரியார் கருத்து. எல்லாம் இறைவன் மயம் இந்த நிலை வரவேண்டுமானால் நாம் பார்க்கிற பொருள் களை எல்லாம் இறைவனுடைய திருவுருவாகப் பார்க்க வேண்டும். 17O