பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்க்குமிழி அவன். அவனுடைய முகத்தைப் பார்த்தாலேயே பசி என்று எழுதி ஒட்டியிருப்பதுபோல இருந்தது. உடம்பிலே சோர்வு; வார்த்தையிலே தளர்ச்சி; நடக்கும் போதே விழுந்துவிடுவான் போலத் தோன்றியது. அவன் மேலே சொன்னவருடைய வீட்டு வாசலுக்கு வந்து, 'ஐயா! பசி தாங்க முடியவில்லை. ஒரு கவளம் சோறு போடுங்கள்' என்று சொன்னான். அவர் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. 'அடடா, நான் மறந்துவிட்டேனே! அடுத்த ஊருக்குப் பத்து மணிக்கு வருவதாகச் சொல்லியிருந்தேனே! என்ன மடத்தனம்?' என்று உடனே வீட்டைவிட்டே புறப்பட்டு விட்டார். அவருக்கு உண்மையில் வேறு ஊரில் வேலை இருக்கிறதோ இல்லையோ, அது நிச்சயம் இல்லை. ஆனால் தம் வீட்டுக்கு எதிரே வந்து நின்று, 'ஐயா பசி' என்றானே, அந்த ஏழைக்கு ஒரு கவளம் சோறு இந்தா என்று சொல்ல அவருக்குப் புண்ணியம் இல்லை; இல்லையென்று சொல்லவோ தைரியம் இல்லை. ஆதலால் அவனைக் கவனிக்காதவர் போல, எங்கேயோ போகிறவர் போன்று எழுந்து போய்விட்டார். யாக்கை நிலை யாதது என்றும், செல்வம் நிலையாதது என்றும் சொல்கிற அந்தப் பெருமான் தம் அளவில் இத்தகைய கைங்கர்யத்தைச் செய்கிறார். அவரைப் பார்த்து அருணகிரியார் சொல்கிறார். நீர்க்குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை நில்லாதுசெல்வம் பார்க்கும் இடத்து அந்த மின்போலும் என்பர், பசித்துவந்தே ஏற்கும் அவர்க்குஇட என்னின் எங்கேனும் எழுந்திருப்பார். போகிற இடம் இன்னது என்று சொன்னால் அந்த ஏழையும் அங்கே வந்துவிடலாம். அல்லது யாராவது அவனை அங்கே அனுப்பி வைத்துவிடலாம். ஆகவே அந்த இடத்தைக்கூடச் சொல்ல மாட்டார்களாம்! இப்படி உயிர்களிடத்தில் அன்பு இல்லாதவர்கள் தம்மை இறைவனுடைய பக்தர்கள் என்று சொல்வதைக் காட்டி லும் கேலிக் கூத்து வேறு இல்லை. சர்க்கரை ஞானம் சர்க்கரையைப் பற்றிப் பேச்சு வருகிறபோது மணிக்கணக்கில் ஒருவர் பேசுவார். கரும்பைப்பற்றியும், அதன் சாகுபடியைப் 11.