பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 னுடைய திருவுருவத்தைத் தரிசனம் செய்யவேண்டும். அன்பு மிகமிக என் நெஞ்சு உருகவேண்டும். உருகி ஆர்வம் மிக உன்னைப் புகழ்ந்து பாராட்டவேண்டும்' என்கிற கருத்தோடு பாடுகிற பாட்டு அது. "விரகற நோக்கியும் உருகியும் வாழ்த்தியும் விழிபுனல் தேக்கிட அன்புமேன்மேல் மிகவும் இராப்பகல் பிறிது பராக்கற விழைவு குராப்புனை யுங்குமாரா!' இங்கே இரவும் பகலும் கடந்து நின்ற ஓர் இன்பம் வேண்டு மென்று குறிப்பிடுகிறார். பிறிது பராக்கற ஆசை என்று குராப் புனையும் குமாரனைப் பார்த்து வேண்டுகிறார். ஐவர் பராக்கு அறல் ஆண்டவனுடைய திருவருள் துணையினால் அன்பு விரிந்து அந்தப் பெருமானுடைய திருவடியைப் பற்றிக் கொள்ளும் நிலை வந்தால் நாமும் பக்தர்களாகி, ஐம்பொறிகளை வென்று இறை வனைச் சாரும் நிலை பெறலாம். அப்போது கருவி கரணங்கள் யாவும் இயற்கையாகத் தமக்குள்ள தொழில்களையே செய்து கொண்டிருந்தாலும், அந்தத் தொழில்கள் யாவும் இறைவனையே சார்ந்தவையாகிவிடும். பல பல இடங்களுக்குச் செல்லும் கால்கள் கோயிலுக்குச் செல்லும். பலருடைய முன்னிலையில் வீழ்ந்து வணங்கும் தலை இறைவனுடைய தாளில் வீழ்ந்து வணங்கும். பலருடன் கலந்து இணைந்து வாழும் வாழ்க்கை அடியார்களோடு இணைந்த வாழ்க்கையாகும். உண்ணும் உணவு இறைவனுடைய பிரசாதமாகிவிடும். இந்த வகையில் இந்திரியங் கள் எல்லாம் இறைவனுடைய சம்பந்தம் உள்ள பொருள்களோடு தொடர்பு பெறுவதால் எண்ணங்களும் இறைவனைச் சார்ந்து நிற்கும். இந்த நிகழ்ச்சிகளை அடுத்தபடி சொல்கிறார். அவிழ்ந்த அன்பால் குராப்புனை தண்டையம் தாள்தொழல் வேண்டும்; கொடியஐவர் பராக்குஅறல் வேண்டும். இதுவரைக்கும் நம்முடைய ஐந்து இந்திரியங்களும் நமக்குத் துன்பத்தைத் தந்து கொண்டிருக்கின்றன. அதனால் அவை 232