பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்க்குமிழி அவர்கள். இத்தகையவர்கள் தம்மையும் கெடுத்துக் கொண்டு தம்மைச் சார்ந்தவர்களையும் கெடுத்து விடுகிறார்கள். ஆண்டவனை நம்முடைய உடம்பாகிய ஆலயத்தில் கண்டு பூசை புரிவது என்பது கிள்ளுக் கீரையா? கண்ணுக்கு முன்னாலே உருவம் எடுத்துக் கொண்டு வந்து நிற்கிற விக்கிரகங்களையே பார்க்க வேண்டிய முறையில் பார்க்க நமக்குத் தெரிவது இல்லை. கண்ணுக்கு முன்னால் நிற்கும் அந்தப் பெருமானைத் தரிசிக்கும் போதே ஆயிரம் ஆயிரம் வேறு பிற காட்சிகளும், எண்ணங்களும் வந்து நம் உள்ளத்தில் போராடிக் கொண்டிருக்கின்றன. இறை வனைப் பார்த்துக் கொண்டே இருக்கும்போது அந்த உருவத்தின் மேலுள்ள ஆபரணத்தில் உள்ளம் செல்கிறது; ஆடையில் உள்ளம் செல்கிறது. நம்முடைய வீட்டுக்கும் இப்படி விளக்குப் போட லாமே என்று ஏதோ ஞாபகம் வருகிறது. இப்படி இருக்கும் போது அந்தப் பெருமானுடைய ஒளி உருவத்தைக் கண்டு உள்ளப் பெருங்கோயிலில் வைத்துப் பூசித்து நம்மை மறந்து நிற்கிற நிலை எளிதில் வரக்கூடியதா? கோயிலுக்குப் போகாத சோம்பேறிகளோ மிக எளிதாக இறைவனைத் தம் உள்ளக் கோயிலில் வைத்துப் பூசிப்பதாகப் பேசுவார்கள். அவர்களால் உலகத்திற்குக் கெடுதியேயொழிய நன்மை இல்லை. உயிர்களிடத்தில் அன்பு ஆகவே, வாயினால் எத்தனை சொன்னாலும் அதைக் கொண்டு ஒருவருடைய தகுதியைத் தெரிந்து கொள்ள முடியாது. வேதாந்த சித்தாந்த நூல் பயிற்சி இல்லாமல், பஞ்சாட்சர ஷடாட்சர உபதேசம் இல்லாமல் இருந்தும், ஒருவன் பசித்து வந்தவர்களுக்குச் சோறு போடுவானேயானால் அவனே சிறந்த வன் என்று கொள்ளவேண்டும். சிலர் தாம் செய்கின்ற தவறான காரியங்களுக்கும், தம்முடைய சோம்பேறித்தனத்திற்கும் நூல் களில் இருந்து மேற்கொள்காட்டுவார்கள்; சமாதானம் பேசுவார்கள். -ošičajóð GlomgiouTiãoit, (Devil quotes the scripture) "a giffusif வேதத்தை மேற்கோள் காட்டுகிறது' என்று. அத்தகையவர்கள் உலகத்திலுள்ள ஆருயிர்களிடத்தில் அன்பு இல்லாதவர்கள்; உண்மையை உணராதவர்கள்; ஆண்டவனிடத்திலும் அன்பு இல்லாதவர்கள். - 15