பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 முருகன் கார்த்திகை மாதர் தந்த பாலை உண்டதும், உமா தேவி கறந்தருத்திய பாலை நுகர்ந்ததும், கிரவுஞ்ச மலையை எறிந்ததும், சூரனை அழித்து இந்திராணியின் தாலி காத்ததுமாகிய திருவிளையாடல்கள் இந்தப் பாடல்களில் வருகின்றன. - இதுவரையில் வெளியாகியுள்ள பதினைந்து புத்தகங்களிலும் பல செய்திகளும் உவமைகளும் மீட்டும் மீட்டும் வந்திருக்கலாம். முருகனுடைய திருநாமங்களையும், திருவிளையாடல்களையும், நம்முடைய குறைகளையும், உலகியலையும் மீட்டும் மீட்டும் அருணகிரியார் சொல்லுகிறார். அப்படி வரும் இடங்களில் முன் சொன்ன சில கருத்துக்கள் மீட்டும் வருவது இயல்பே. ஆயினும் முன்னே விரிவாகச் சொன்னதைப் பின்னே சுருக்கியும், முன்னே ஒரு வகையில் விளக்கியதைப் பின்னே வேறு வகையில் விளக்கியும், சுருக்கமாகச் சொன்னதைப் பெருக்கியும், மேற்கொள் இல்லாமற் சொன்னதை மேற்கோள் காட்டி வற்புறுத்தியும் சொல்ல முயன்றிருக்கிறேன். இருப்பினும் பல இடங்களில் ஒரே கருத்து வந்திருப்பதை மாற்ற முடியவில்லை. அவற்றை மீட்டும் படிக்கும் போது, 'சொன்னதையே திருப்பிச் சொல்கிறாரே!' என்று அன்பர்கள் சலித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். தனித்தனிப் புத்தகமாக வரும் இந்த வரிசையில் ஏதேனும் ஒன்றை மட்டும் படிக்கும் அன்பருக்கு ஓரளவு தெரிய வேண்டும் அல்லவா? அந்தப் பயனை எண்ணி, இந்தக் கூறிய கூறல் குற்றத்தை அன்பர்கள் பொறுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். வழக்கம்போல் இந்த அலங்காரச் சொற்பொழிவுகளைச் சுருக்கெழுத்தில் எடுத்துத் தட்டெழுத்தில் வடித்துத் தந்தவர் திரு. அனந்தன் அவர்கள். சுருக்கெழுத்துக் கலையில் கைவந்த அவரு டைய உதவி இன்றேல் இந்த வடிவில் இவ்வரிசை வந்திராது. அவருக்கு முருகன் இன்னருளால் எல்லா நலங்களும் மேன்மேலும் ஓங்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன். கி.வா. ஜகந்நாதன் 244