பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழனித் திருநாமம் தலப்பெயர் தலந்தோறும் சென்று அங்கங்கே எழுந்தருளியிருக்கும் ஆண்டவனைத் தரிசனம் செய்து இன்புறுதல் சமய வாழ்க்கையில் அடிப்படையான வழக்கம். ஆண்டவனுடைய தரிசனத்தைச் செய்தவர்கள் மெல்ல மெல்ல அவனுடைய திருவுருவை உள்ளத்தில் வைத்துத் தியானம் செய்ய வேண்டும். அந்தத் தியானத்திற்குக் கருவியாகவே தல தரிசனத்தைப் பெரியவர்கள் அமைத்திருக்கிறார்கள். அப்படிப் போய்த் தரிசனம் பண்ணுவது கூடக் காலம், சக்தி, செல்வம் ஆகியவற்றைப் பொறுத்தது. பல ஊர்களுக்குப் போகவேண்டாம். சொந்த ஊரில் கோயில் இருக் கும். கோயில் இல்லாத ஊர் தமிழ்நாட்டில் இல்லை அல்லவா? அந்தக் கோயிலுக்குச் சென்று தினமும் தெய்வத்தைத் தரிசித்து வழிபடுவது நல்லது. அதுவும் முடியவில்லை; உத்தியோகத் தொந்தரவு அதற்கு இடம் கொடுக்கவில்லை. அப்போது வீட்டி லேயே ஒரு படத்தை வைத்து வழிபடலாம். அப்படியும் முடிய வில்லை. இறைவனுடைய திருநாமத்தையாவது சொல்லிக் கொண்டிருக்கலாம். கடவுளுடைய திருவுருவத்தைத் தியானிப்பது ஒருவகை முயற்சியினால் நடப்பது. ஆனால் அவன் திருநாமத்தை எளிதில் சொல்லிவிடலாம். அவன் திருநாமத்தைச் சொல்வது கிடக்கட்டும். அவன் இருக்கிற ஊர்களின் பெயரையாவது சொல் லலாம். அது எல்லாவற்றையும்விட மிக எளிது. "இதைக்கூட நீ சொல்லாமலே இருக்கிறாயே!” என்று தொடங்குகிறார். 'அப்பா! நீ ஆண்டவன் நாமத்தைக்கூடச் சொல்ல வேண் டாம். அவன் உறையும் எல்லாத் தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்ய வேண்டாம். அவன் எப்போதும் அருள் ஆட்சி செய்து எழுந்தருளியிருக்கும் பழனிக்குப் போ என்றுகூட நான் சொல்ல வில்லை. அந்தச் சிறந்த தலத்தின் பெயரைக்கூடவா சொல்லக் கூடாது? பெயரைச் சொன்னாலும் புண்ணியம் உண்டாகுமே! இந்த எளிய காரியத்தைக்கூட நீ செய்யாமல் இருக்கிறாயே!” என்று இரங்கிப் பேசுகின்றார். திருநாளைப் போவாராகிய நந்தனார் நடராசப் பெருமானைக் கண்டு முதலில் சேவிக்கவில்லை. சிதம்பரத்திற்குப் போகவில்லை. தில்லை, தில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாராம். க.சொ.V-17 24了