பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழனித் திருநாமம் களில் வாழ்க்கைக்குரிய வசதிகளும், நாகரிக முயற்சிகளும், சினிமாக் கொட்டகையும் இல்லாமல் இல்லை. ஆனாலும் எல்லாவற்றுக்கும் மேலாக என்றும் மறையாமல் இருக்கின்ற பெருமை இறைவனுடைய சம்பந்தத்தினால் உண்டானதுதான். ஊருக்கே அதனால் மாறாத பெருமை உண்டு. தலதரிசனப் பயன் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்பைச் சொல்வார் கள். பல பெருமக்கள் வந்து வழிபட்ட இடம் என்று சொன்னால் அந்தத் தலத்திற்கு மதிப்பு உண்டாகிறது. இறைவனுடைய திருவருளைப் பெறவேண்டுமென்று முயற்சி செய்கிறவனுக்குக் குருநாதன் கிடைக்க வேண்டும். குருநாதன் எளிதில் கிடைக்க மாட்டான். பல இடங்களில் தேடி ஒரு மூலிகையைக் கண்டு பிடிப்பது போலக் குருவினுடைய திருவருள் கிடைக்க வேண்டும். மூலிகை கடையில் கிடைக்காது; சந்தையில் கிடைக்காது; வீட்டுக் கொல்லையிலும் கிடைக்காது. மலைப் பிராந்தியங்களில் தான் சிறந்த மூலிகை வளரும். ஆகவே அதைத் தேடுகிறவன் பெரிய சாலைகளில் நடந்து கொண்டிருந்தால் பயன் இல்லை; பங்களாக்களுக்குப்போய் வந்தாலும் பயன் இல்லை. எங்கே எங்கே மூலிகைகள் உண்டோ அங்கெல்லாம் போய்த் தேட வேண்டும். அதுபோல இறைவனுடைய திருவருளைப் பெறுவதற்கு வழி காட்டுகிற குருநாதன் இந்த உலகத்தில் இருந்தாலும் அவன் எங்கே இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நல்லவர்களிடையே சிறந்த ஞானிகள் பழகுவார்கள். தம்மைக் காட்டிக் கொள்ளாமல் அத்தகைய கூட்டத்தில்தான் அவர்கள் இருப்பார்கள். எங்கே தீர்த்த விசேடம் இருக்கிறதோ, தல விசேடமும் மூர்த்தி விசேடமும் உள்ளனவோ அங்கேதான் பெரும்பாலும் பெரியவர்கள் இருப்பார்கள். அவர்கள் தம்மைக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் வேறு இடங்களில் தங்குவதற்கு அவர்கள் மனம் இடம் கொடுக்காது. ஆகையால் தலங்களையும், தீர்த்தங்களையும், மூர்த்திகளையும் தேடிக் கொண்டு போனால் நடமாடும் மூர்த்தியாகிய குருநாதனை என்றைக்காவது ஒருநாள் கண்டுபிடித்துவிடலாம். தலயாத்திரை செல்வதில் இத்தகைய ஒரு பயன் உண்டு 249