பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழனித் திருநாமம் அவற்றிற்குத் தனிச் சிறப்பு என்பது இல்லை. இறைவன் இருப்பது தான் சிறப்பு என்றால் உலகம் முழுவதும் அவனுக்குரிய தலமே. ஏதேனும் ஒரு கடையில் பல பண்டங்களை விற்பார்கள். அந்தக் கடையில் வியாபாரம் செய்கின்றவனும் உரமுள்ளவனாக இருக்க லாம். ஆனால் கடையில் இருக்கும் பண்டம் நல்லது என்பதை வியாபாரிகள் பேச்சினால் நாம் நம்புவது இல்லை. நமக்கு வேண்டியவர்கள், நம்முடைய மதிப்புக்கு உரியவர்கள் அந்தக் கடையில் பண்டங்களை வாங்கிப் பயன்படுத்திக் கொண்டதாகச் சொல்லும் போதுதான், நாமும் அங்கே போய் வாங்கலாம் என்ற நம்பிக்கை எழுகிறது. அப்படி, எல்லாத் தலங்களிலும் இறைவன் இருந்தாலும் எந்த எந்தத் தலங்களில் பல பெரியவர்கள் வந்து வழிபட்டு நல்ல அநுபவத்தைப் பெற்றார்களோ அந்தத் தலங் களுக்கு சென்றால் பக்தி முதிர்கிறது. அத்தகைய தலங்களில் மற்றப் பெரியவர்களும் வந்து சேருவார்கள். ஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் தம்முடைய திருப்பாட்டினாலே புகழ்ந்த தலங்களுக்குப் பெருமை உண்டாகியிருக்கிறது. அங்கே இறைவன் தனிச் சிறப்போடு இருக்கிறான் என்பது அல்ல. அந்த இடத்தில் திருஞான சம்பந்தப்பெருமான் முதலிய பெருமக்கள் வந்து அருள் அநுபவம் பெற்று அதன் விளைவாகப் பாடல்கள் பாடியிருக் கிறார்கள் என்ற நினைவு அங்கே போனால் உண்டாகிறது. அப்போது நாமும் அதனைப் பெறவேண்டுமென்ற ஆர்வம் அதிகமாகும். கல்யாணமாகாத பிரமசாரி ஒருவன் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்ற ஆசை உடையவனாக இருக்கலாம். ஆனால் அந்த ஆசை சில சமயங்களில் மிக அதிகமாக முறுகி நின்று வேதனைப்படுத்தும். தன்னைப் போல மற்றொரு பிரமசாரிக்குக் கல்யாணம் ஆகி, அந்தக் கல்யாணத்திற்கு அவன் சென்றிருந்தானானால், நமக்கும் இப்படி ஒரு கல்யாணம் நடக்கவில்லையே' என்ற ஏக்கம் எழும். கல்யாணம் நடப்பதற் குரிய பருவம் அவனுக்கு எப்போதும் இருந்தாலும், முதிர்ந்த எண்ணம் எழுவது அதனை நினைப்பதற்குரிய இடத்தில்தான். அவ்வாறே இறைவனுடைய திருத்தலங்கள் எங்கும் இருந்தாலும் அவன் திருவருள் பெற்ற பெரியவர்கள் நல்ல அநுபவத்தை அடைந்த இடமானால் நமக்கு அந்த நிகழ்ச்சியின் நினைவும் 253.