பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 இவ்வளவுதான் என்ற வரையறையில்லை. மிக்க செல்வனாக இருக்கிறவன் பிறருக்குக் கொடுத்து வறியவனானால் அந்த நிலையை முன் இருந்த செல்வத்தைக் காட்டிலும் பெரிய செல்வம் என்று நினைக்கிற இயல்பு இந்த நாட்டு மக்களுக்கு உண்டு. முசியாமல் இட்டு மிடிக்கின்றிலை என்றால், 'சிறிதேனும் சலிக்காமல் அடியார்களுக்கு இட்டு அதனால் வறுமையை அடையவில்லையே! என்று பொருள். 'அவன் லட்ச ரூபாய் உடையவன்' என்று பிறர் சொல் வதைக் காட்டிலும், 'லட்ச ரூபாய்க்கு மேல் சொத்து இருந்தது. பிறருக்குக் கொடுத்தே அந்தத் தர்மப் பிரபு இன்றைக்கு ஆண்டி யாக இருக்கிறான்' என்று சொன்னால் அது மிகப் பெரிய பேறு. யாரிடத்திலும் செல்வம் நிலைத்திருக்கப் போவதில்லை. ஆனால் அத்தகைய பேறு நிலைத்திருக்கும். திருட்டிலே கொடுத்துவிட்டு ஆண்டியானவரும், தவறான வழிகளில் பணத்தைச் செலவிட்டு ஆண்டியானவரும் வறுமையையும் துன்பத்தையும் அடைவார் கள். ஆனால் பிறருக்குக் கொடுத்து வறுமையை ஏற்றவர்கள் பிறரால் புகழப்படுவதோடு தம்முடைய உள்ளத்திலும் ஒரு வகை நிறைவு பெறுவார்கள். அழகான பொருள்களை எல்லாம் தொகுத்துச் சொன்ன ஒரு புலவர், 'கொடுத்து இளைத்த தாதா அழகன்' என்று சொல் கிறார். பிறருக்குக் கொடுத்து அதனாலே வறுமையைப் பெற்ற வள்ளல் சிறந்த அழகுடையவனாம். யாருக்காவது உடம்பு மெலிந்தால் அது அழகன்று. ஆனால் தன் மணவாளனுடன் புது வாழ்வு தொடங்கினவள் சற்று மெலிந் தால் அது ஒரு தனி அழகாம். அப்படியே விரதம் இருந்து உடம்பு மெலிந்தால் அந்த உடம்பு அழகு. கண்ணுக்கு அழகு அன்று: கருத்துக்கு அழகு. புண்பட்ட வீரன் அழகன். விக்கிரகமாக வெட்டப்பட்ட கல் அழகிது. அவைபோல் பிறருக்குக் கொடுத்து வறுமையை மேற்கொண்டவன் அழகன். “சுரதந் தனில்இளைத்த தோகை, சுகிர்த விரதந் தனில்இளைத்த மேனி - நிரதம் கொடுத்திளைத்த தாதா, கொடுஞ்சமரிற் பட்ட வடுத்துளைத்த கல்அபிரா மம்." 262