பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்த குற்றம் என்ன? பெருமான் ஆணையின்றி எதுவும் நடப்பதில்லை; அதனால் குறை கூறுவது பிரமனையே ஆனாலும் அவனுக்குத் தலை வனாகிய முருகனிடத்தில் இந்த விண்ணப்பத்தைச் சொல்லுகிறார். கோடாத வேதனுக்கு யான்செய்த குற்றம்என்? குன்றுஎறிந்த தாடாளனே, தென் தணிகைக் குமர, நின் தண்டைஅம்தாள் சூடாத சென்னியும் நாடாத கண்ணும் தொழாதகையும் பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தனனே. (கிரவுஞ்ச மலையை வேலால் எறிந்து அழித்த பராக்கிரமத்தை உடையவனே! தென்னாட்டில் உள்ள தணிகாசலத்தில் எழுந்தருளி யிருக்கும் குமரக் கடவுளே! நின்னுடைய தண்டையை அணிந்த அழகிய பாதங்களை வணங்கி அணியாத தலையையும், அவற்றைத் தேடித் தரிசியாத கண்களையும், அவற்றைக் குவிந்து தொழாத கைகளையும், அவற்றின் புகழைப் பாடாத நாவையும் எனக்காகவே ஆராய்ந்து பொறுக்கி எடுத்து வேதன் அமைத்தானே; சிறிதும் பட்சமாதம் இல்லாத அந்தப் பிரமனுக்கு தான் செய்த பிழை என்ன? கோடாத ஒரு பால் சாயாத பட்சபாதமில்லாத. 'கோடாமை சான்றோர்க் கணி' என்பது திருக்குறள். வேதன் - பிரமன். தாடாளன் - தாளாளன். தாடாளன் என்று சீர்காழியிலுள்ள திருமாலுக்கு ஒரு பெயர் உண்டு; பெருமுயற்சியுடையோன் என்பது பொருள்.) இது கந்தர் அலங்காரத்தில் 76-ஆம் பாட்டு, 233