பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயக்கத்துக்கு முறிவு வண்ணம் என்பது இங்கே அழகைக் குறிக்கும். அவர்கள் பருவ மடந்தையர்கள் என்பதை இந்த வருணனை காட்டுகிறது. அவர்களை அணைய எண்ணுகிறார்கள் காளையர்கள். அந்த எண்ணம் மயக்கமாக, மயலாக, காமமாக வளர்கிறது. அதை அவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். சேர எண்ணி மால் வாங்கி, வாங்குதல் என்பது நம்மிடத்தில் உள்ள பொருளைக் கொடுத்து வேறு பொருளைப் பெறுதல். இங்கும், அறிவுடைய ஆடவர் தம் அறிவைக் கொடுத்து மாலை வாங்கிக் கொள்கின் றனர். தாம் செய்ய வேண்டிய முயற்சியில் ஈடுபடாமல் அந்த முயற்சியையும் பறிபோகவிட்டு, தம்முடைய தொழில் ஆற்றலை நழுவவிட்டு, இது தக்கது, இது தகாதது என்கிற ஆராய்ச்சியை யும் அர்ப்பணம் செய்துவிட்டு, மாலை வாங்கிக் கொள்கிறார்கள். உடல் பொருள் ஆவி என்ற மூன்றையுமே கொடுத்து மாலை வாங்கிக் கொள்கிறார்கள் என்றுகூடச் சொல்லி விடலாம். வீதியிலே தம் அழகையும், போகத்தையும் விற்க வருகின்ற மடந்தையர்களிடம் தம்மிடம் உள்ள எல்லாவற்றையும் கொடுத்து விட்டுக் காமத்தைக் காளையர்கள் வாங்கிக் கொள்கிறார்களாம். ஏங்கி மயங்குதல் அப்படி வாங்கிக் கொள்வதனாலே அவர்களுக்கு ஏதேனும் நன்மை உண்டாகிறதா? கண்ணினாலே அவர்களைக் கண்டு, அவர்களைச் சேரவேண்டுமென்று மனத்தினாலே எண்ணி, பின்பு அந்த எண்ணம் முறுகி மாலாக நிற்க, அதன் பயனாக ஏக்கம் உண்டாகிறது. இப்படி ஏங்குகிறவர்கள், முயற்சி செய்து தம்மிடம் உள்ள பணத்தைக் கொடுத்து அவர்களை அணைந்து விட்டால், மீண்டும் அவர்களோடு சேரவேண்டும் என்ற விருப்பம் எழுகிறது. எப்போதும் இடைவிடாமல் அவர்களோடு இருப்பதற்குப் பண நிலை இடம் கொடுப்பதில்லை. அதனால் ஒருகால் இன்புற்றாலும் அதனால் நிறைவு பெறாமல் மீட்டும் மீட்டும் பெறவேண்டுமென்று எண்ணுகிறார்கள். இதனால் அவர் களிடம் அவ்வப்போது இருக்கும் சிறிதளவு தெளிவுகூடப் போய்விடுகிறது. மால்வாங்கி ஏங்கி மயங்காமல். 289