பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர் கொண்டு போவர்? பிறகு மக்களும், பேரன் பேத்திகளும் தோன்றிக் குடும்பம் பெருகுகிறது. இவ்வளவுக்கும் மூலகாரணமாக இருக்கிற உறவு மனைவிதான். நம்முடைய வாழ்க்கை மனையாட்டியோடு சேர்ந்து வளரத் தொடங்குகிறது. அதனால் மனைவியை வாழ்க்கைத் துணை என்று வள்ளுவர் கூறுவர். அடுத்தப்படியாகச் சொத்தைச் சேர்த்துக் கொள்கிறோம். நிலம், தோட்டம் ஆகிய எல்லாவற்றையும் அசையாப் பொருள்கள் என்று சொல்வார்கள். அவற்றுள்ளே எல்லோருமே காண அமைவது வீடு. அசையாப் பொருளாகிய சொத்தின் பிரதிநிதி வீடு என்று சொல்லலாம். வீட்டை ஒருவன் கட்டிக் கொண்ட பிற்பாடு வாழ்க்கைக் குரிய பொருள்கள் பலவற்றைச் சேர்த்துக் கொள்கிறான். அணி களைச் சேர்க்கிறான். கார் முதலியவற்றைச் சேர்க்கிறான். இவை யாவுமே பணத்தினால் உண்டாவன. ஆகவே உறவினர்களுக்கு எல்லாம் பிரதிநிதியாக மனைவி யையும், அசையாப் பொருள்களுக்குப் பிரதிநிதியாக வீட்டை யும், அசையும் பொருள்களுக்குப் பிரதிநிதியாகப் பணத்தையும் சொல்லலாம். மனையாட்டி, வீடு, பணம் ஆகிய மூன்றும் பலவகை உடைமைகளுக்கு அடையாளங்கள். மனிதன் இந்த மூன்று வகைப் பொருள்களிடத்திலும் ஆசை வைத்து அழிந்து விடுகிறானே என்று அருணகிரியார் இரங்குகிறார். இப்போது பார்க்கப் போகிற கந்தர் அலங்காரப் பாட்டில் இரங்குவது மட்டும் அன்று; கந்தர் அநுபூதியிலும் இந்த மூன்றையும் சொல்கிறார். அநுபூதிப் பாட்டு இந்த மூன்றின் மூலமாக உள்ளத்தைப் பற்றுவது மாயை. மாயை மூன்று வகைப்படும். சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என்பன அவை. பிரகிருதி மாயை பிரபஞ்சத்தில் நாம் வாழும்போது நமக்குத் தெளிவு உண்டாகாமல் கலக்கத்தை உண்டாக்குவது. பிரபஞ்சத்தில் வாழும் மனிதன் இந்த வாழ்க்கை யில் பற்றுக் கொண்டு இறைவன் அருளைப் பெற வேண்டுமென்ற தெளிவு இல்லாமல் மேலும் மேலும் ஆசையைப் பெருக்கிக் கொள்வது, இந்த மாயையினால் நிகழும் விளைவு. ஆசைதான் 3O1