பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்க்குமிழி இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். இத்தகைய போலி ஞானிகள் உலகத்தில் புல்லுருவிகளாக இருக்கிறார்கள். இதனை நினைந்து அருணகிரியார் இந்தப் பாட்டைப் பாடுகிறார். நீர்க்குமி ழிக்கு நிகர் என்பர் யாக்கை:நில் லாதுசெல்வம்; பார்க்கும் இடத்துஅந்த மின்போலும் என்பர்; பசித்துவந்தே ஏற்கும் அவர்க்குஇட என்னின்னங் கேனும் எழுந்திருப்பார்; வேல்கும ரற்குஅன்பி லாதவர் ஞானம் மிகவும் நன்றே! ('நம் உடம்பு நீர்மேல் தோன்றும் குமிழிக்கு ஒப்பானது' என்பார்கள்; செல்வம் நில்லாது; ஆராய்ந்து பார்த்தால் அது மின்னலைப் போன்று தோன்றி விரைவிலே மறைந்துவிடும்' என்பார்கள். யாரேனும் பசியினால் துன்புற்று வந்து, 'ஐயா சோறு' என்று பிச்சை கேட்டால், எங்காவது போகவேண்டு மென்று சொல்லி அந்த இடத்தை விட்டே எழுந்து போய் விடுவார்கள். இத்தகையவர்கள் வேலாயுதத்தைப் பிடித்த குமரக் கடவுளிடத்தில் உண்மை அன்பு இல்லாதவர்கள். இவர்களுடைய வாசாஞானம் நல்ல ஞானம்! வேற்குமரனுக்கு அன்பு உள்ளவர்கள் வாயால் ஒன்றும் சொல்லா விட்டாலும் பசி என்று வந்தவர்களுக்கு இரங்கிச் சோறு அளிப்பார்கள் என்ற கருத்தை இது வேறு வகையில் உணர்த்துகிறது. யாக்கை நிகர் என்பர். பார்க்குமிடத்து - ஆராயும்போது. அந்த: உலகறி சுட்டு. ஏற்கும் அவர் - இரக்கும் ஏழைகள். எங்கேனும் - ஏதாவது இடத்தை எண்ணி. நன்றே என்றது குறிப்பு மொழி, நன்று அன்று என்ற பொருளை உடையது.) இது கந்தர் அலங்காரத்தில் 66ஆம் பாட்டு. க.சொ.V-3 23