பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தாகுலம் தீர கின்றன. அவற்றிலும் சிறியது. பெரியது என்ற வேறுபாடு உண்டு. பல காலமாக மிகப் பெரியவர்கள் விண்ணப்பம் போட்ட இடங்கள் பெரிய நிலையங்கள். அத்தகைய சிறந்த நிலையங் களில் ஒன்று திருத்தணிகை. திருத்தணிகை செய்ய வேல் முருகனை நோக்கி விண்ணப்பம் செய்யும் அருணகிரிநாதர் தம்முடைய முறையீட்டைத் திருத்தணிகை என்னும் அருள் நிலையத்தில் போடுகிறார். அந்த நிலையம் எப்படி இருக்கிறது? அது ஒரு குன்று. பல மரங்கள் அடர்ந்த பொழில் களை உடையது. அங்கே முருகன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறான். கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றில் நிற்கும் கந்தா! முருகன் நிற்கும் குன்றத்தைச் சூழக் கடம்ப மரங்கள் வானுற ஓங்கி வளர்ந்திருக்கின்றன. அவற்றில் கொத்துக் கொத்தாக மலர்கள் மலர்ந்து மணக்கின்றன. கடம்ப மலர் முருகனுக்குரிய மலர்கள் பல. அவன் போருக்குச் செல்லும் போது காந்தளை அணிந்து கொள்வான். போர்க்களத்தில் அவனை அடையாளங் காட்டும் கண்ணி அது. வெட்சிப் பூவும் அவனுக்கு விருப்பமானதுதான்; ஆனால் அவன் எப்போதும் விரும்புவது கடம்ப மலர். கடம்ப மலர்மாலையை அவன் தன் திருமார்பில் அணிந்திருக்கிறான். அதனால் சங்க நூல்களில், 'காரலர் கடம் பன், கார்க்கடம்பந் தாரெங்கடவுள்' என்று முருகனைப் பழம் புலவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கடம்பன் என்று சொன்னாலே போதும்; முருகன் என்று தெரிந்து கொள்ளலாம். கடம்ப மாலையைப் போகத்துக்குரிய தார் என்று, திருமுரு காற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் எழுதியிருக்கிறார். முருகன் தன் தேவியரோடு இருந்து உலகமெல்லாம் இன்புறும் படி அருளுகிறான். தான் போகியைப் போல மனைவியுடன் இருந்து உலகத்து மக்கள் கணவன் மனைவியராக இல்லற 323