பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 முன் பாதுகாப்பு நாளைக்கு உணவு வேண்டுமே என்று தேடி வைத்துக் கொள்ளும் அறிவு விலங்குகளுக்கு இல்லை. நமக்கு இன்பத்தை அளிப்பது எது, துன்பத்தை அளிப்பது எது என்று நமக்குத் தெரி கிறது. இனிமேல் நமக்கு வரும் இன்பம் எத்தகையது, துன்பம் எத்தகையது என்று எண்ணிப் பார்க்கின்ற அறிவு நமக்கு இருக் கிறது. பசித் துன்பம் வருமே என்று உணவு ஆக்கிக் கொள்ள நமக்குத் தெரிகிறது. அரிசி குத்தி வைத்துக் கொள்கிறோம். நெல்லைக் குதிரில் போட்டு வைத்துக் கொள்கிறோம். நிலம் வாங்கி வைக்கிறோம். தலைவலி வருமே என்று அம்ருதாஞ்சனம் வாங்கி வைத்துக் கொள்கிற அறிவு நமக்கு இருக்கிறது. இத்தகைய அறிவுடைய நாம் நமக்கு வருகிற துன்பங்களுக்கு எல்லாம் தலையாய துன்பம் எது என்று ஆராய்ந்து அந்தத் துன்பத்தினின்றும் விடுதலை பெறுவதற்குரிய வழியைத் தேடிக் கொள்ள வேண்டாமா? காலத்தில் வேலை மனிதன் ஒவ்வொரு நிமிஷமும் முயற்சி பண்ணிக் கொண் டிருக்கிறான். ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு ஓடுகிறான். அலுவலக வேலை நடக்க வேண்டுமே என்பதற்காக அல்ல; அங்கே போய் வேலை செய்தால்தான் வெள்ளையப்பர் வருவார்; நாம் குடும்பத்தோடு வாழமுடியும். இப்படி வயிற்றுக்காகப் பாடு பாட்டுப் பல வேலைகளைச் செய்கிறான். பலருடைய உதவியை எதிர்பார்க்கிறான். காலத்தை எதிர் பார்க்கிறான். சரியாகப் பத்து மணிக்குக் காரியாலயத்தை நோக்கி அவன் ஒடுவது, முதல் தேதி தப்பாமல் சரியான காலத்தில் பணம் வருவதற்காக. முதல் தேதி தப்பாமல் பணம் வந்தால்தான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் சரியான காலத்தில் அவனுக்குச் சோறு கிடைக்கும். இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொன்றோடு இணைந்து இருக்கிறது. இந்த உடம்புக்கு வருகிற துன்பத்தை நீக்கக் கருதி முன்பே பாதுகாப் பான காரியம் செய்கிறோம். இதை அறிவுடையவன் செயல் என்கிறோம். ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. பிறந்தது முதல் ஐந்து ஐந்து ரூபாய் சேமிப்பு நிதியில் கட்டுகிறான். அந்தக் 34C