பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யமனுக்கு எச்சரிக்கை தைரியத்தில் என்னிடம் வந்தால் என்ன செய்வேன் தெரியுமா? நீ எல்லா உம்பிலிருந்தும் உயிர்களை வாங்குகிறவன் என்று புகழ் பெற்றிருக்கிறாய். அதனால் செருக்கும் அடைந்திருக்கிறாய். ஆனால் இங்கே வந்தாயானால் உன் உயிரை நான் வாங்கி விடுவேன். இது நினைவு இருக்கட்டும்' என்று அறை கூவுகிறார். வாராது அகல் அந்தகா, வந்தபோது உயிர் வாங்குவனே. Lissó)/6)6.7" இவ்வாறு வீறு பேசுவதற்கு அருணகிரியாரிடம் என்ன பலம் இருக்கிறது? ஏதாவது ஆயுதத்தைக் கையில் வைத்திருக்கிறாரா? அவர் கையில் எந்தப் படையும் இல்லை. எதிரே மாடு வருகிற தென்றால் கையில் உள்ள குச்சியால் அடித்து விடலாம். சித்திரத்தில் உள்ள மாட்டை அடிக்க வேண்டுமானால் கைக் குச்சி பயன்படாது. அந்தச் சித்திரத்திலேயே மாட்டை அடிப்பது போல ஒரு குச்சியையும், ஆளையும் எழுத வேண்டும். அதற்காகக் கையில் குச்சியை எடுக்க வேண்டியதில்லை; வண்ணம் தீட்டுகிற தூரிகைதான் வேண்டும். யமன் எப்படி இருக்கிறான்? நம் கண் முன்னால் உருவத் தோடு வந்து நிற்கவில்லை. யமன் வருவான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவன் இருப்பதாக ஒரு பாவனை நிலவு கிறது. உயிரைப் போக்குகின்ற ஒரு சக்திக்கு உருக் கொடுத்துப் பருப்பொருளாகச் சொல்லியிருக்கிறார்கள். குதிரையின் மேல் வரும் மனிதனைப் போலக் கண்ணுக்கு நன்றாகத் தெரியும்படி எருமைக் கடாவின் மேல் அவன் வருவது இல்லை. யமன் என்ற கற்பனை, அவன் நம்மைப் பாசம் போட்டு இழுத்துச் செல்வான் என்ற பாவனை எல்லாம் மனத் தளவில் நிற்கின்றன. அந்தப் பாவனைக்கு மாற்று மற்றொரு பாவனைதான். யம பயத்தைப் போக்குவதற்குரிய படைக்கலங்களை அருணகிரியார் கையிலே எடுத்துக் கொள்ளவில்லை; மனத்திலே நினைக்கிறார். இந்த நினைப்பு இடைவிடாது இருப்பதனால் அவருக்குத் தைரியம் உண்டாகிறது. முருகப் பெருமானுடைய திருவுருவத் தியானந்தான் அது. அந்தப் பலத்தினால் அறை கூவுகிறார். 349