பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி காலும் உடைய மனிதனாகப் பிறந்திருக்கிறோம் என்பதை மட்டும் நினைக்கவில்லை. இறைவனைத் தனியே இருந்து வழி பட்டு வரவரப் பக்குவம் முதிர்ந்து அவன் திருவருளுக்கு ஆளாகும் வாய்ப்புடைய இந்த நாட்டில் மனிதனாகப் பிறந் தேனே! என்ற நினைப்போடு பாடுகிறார். விலங்குகள் பூசித்தல் இறைவனைத் தனியே இருந்து பூசைபண்ண வேண்டியதன் அவசியத்தை வேறு ஒருவகையிலும் இந்த நாட்டார் வற்புறுத்தி யிருக்கிறார்கள். யாராவது ஒரு பையன், வசதி உள்ளவன், பள்ளிக் கூடத்திற்குப் போய்ப் படிக்காவிட்டால் அவனுடைய தந்தையார், அடே பைத்தியக்காரா! அதோ பார். பிச்சை எடுக்கிற அந்த ஏழைப் பையன் எவ்வளவு நன்றாகப் படிக்கிறான்! நீ இப்படி இருக்கிறாயே!” என்று சுட்டிக்காட்டுவது வழக்கம். அது போலவே பிறவிகளில் சிறந்த மனிதப் பிறவி எடுத்தும் வழிபாடு செய்யா மல் இருக்கிறவர்களுக்கு, மற்றப் பிறவிகளாகிய விலங்கினங் கள்கூட இறைவனைத் தனியே வழிபட்டு நன்மை அடைந்திருக் கின்றனவே என்பதைப் பெரியவர்கள் புராணங்களின் மூலம் நினைப்பூட்டுகிறார்கள். புழுவும் பூச்சியும் ஆண்டவனுடைய திருவுருவத்தை வழிபட்டு நல்ல பேறு பெற்றன என்று தல புராணங்கள் சொல்கின்றன. திருச்சிக்கு அருகில் திருஎறும்பூர் என்ற தலம் இருக்கிறது. இப்போது அதைத் திருவரம்பூர் என்று வழங்குகிறார்கள். திருச்சி யில் இருந்து தஞ்சைக்கு வரும் வழியில் அந்தத் தலம் இருக் கிறது. சிறிய குன்று. அங்கே எறும்பு ஆண்டவனைப் பூசை பண்ணிப் பேறு பெற்றதாம். திருவானைக்காவல் என்ற தலத்தைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள். அங்கே யானை பூசை பண்ணியதாம். சிலந்தி பூசை பண்ணியதாம். ஒரு நாவல் மரத்தின் அடியில் சிவ பெருமான் லிங்க உருவத்துடன் தோன்றினான். ஒரு சிலந்திக்கு அந்தப் பெருமானிடத்தில் பக்தி உண்டாயிற்று. 'பெருமான் வெயிலில் காய்கிறானே' என்று மனம் வருந்திய சிலந்தி லிங்கத்தின்மேல் பந்தல் போட்டது போல வலை பின்னியது. ஆண்டவனுக்கு இந்த வழியிலாவது தொண்டு செய்யலாம் என்ற அறிவு அதற்கு இருந்தது. தன்னுடைய இயல்புக்கு ஏற்றபடி விதானம் போலக் கூடு கட்டித் தொண்டு செய்தது. 33