பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி ஏது? பிராணிகளுக்கும் மனம் உண்டு; அறிவு உண்டு. நாய் தன் எசமானனை அறிந்து கொள்கிறது. கன்று தன் தாயை அறிந்து கொள்கிறது. எல்லா விலங்கினங்களும் உண்ணுவது எது, உண் ணாதது எது என்பதை அறிந்து கொள்கின்றன. இவற்றைக் கொண்டு பார்த்தால் நம்மைக் காட்டிலும் அவற்றிற்கு அறிவு குறைவாக இருக்கலாம் என்று சொல்லலாமேயன்றி, அறிவே இல்லையென்று சொல்ல முடியாது. “புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மன்த்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்" என்று அப்பர் சுவாமிகள் வேண்டுகிறார். புழுவுக்கும் மனம் இருக்கிறது என்றும், அந்த மனத்தில் இறைவன் அடியை நினைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறதென்றும் அதிலிருந்து ஊகித்துக் கொள்ளலாம். வண்டு கோயிலுக்குள் சென்று இறைவனைச் சுற்றுகிறது. குருக்கள் போகிற இடத்திற்கு எல்லாம் அதுவும் போகிறது. நம்மால் அப்படிப் போக முடியாது. அதைக் காணும்போது, அந்த வண்டு இறைவனை வலம் வருவதாக எண்ணிக் கொள்ளலாம். கூர்ந்து அறிவதற்குரிய ஆற்றல் நம்மிடத்தில் இல்லாதபோது அது பூசை செய்யவில்லையென்று சொல்லுவது நியாயமாகாது. நமக்கு ஒன்று தெரியவில்லை யென்பதனால் அந்தப் பொருளே இல்லையென்று சொல்வது முறை அன்று. விலங்குகளின் மொழி பிராணிகளுக்கு அறிவு உண்டு. அவற்றுக்கும் தனித்தனியே மொழி உண்டு. நம்முடைய மொழியைப் போல வளப்பம் பெற்றதாக இல்லாவிட்டாலும் சிலவகை ஒலிக் குறிப்புகளால் பிராணிகளும் பேசுகின்றன. காக்கைக்கும் பேசுகின்ற ஆற்றல் உண்டு. நம்மைப் போன்ற ஒலி விரிவுடன் அது பேசுவது இல்லையென்பதே வேறுபாடு. பாரதியார் காக்கையின் பேச்சைக் கவனித்துக் கிட்டத்தட்ட முப்பது வகையான ஒலிகளை அது ஒலிக்கிறது என்று எழுதியிருக்கிறார். மலைக் காட்டில் வாழ்கிற குடிகளுக்குப் பிராணிகளின் ஒலியைக் கண்டு அவற்றின் உள்ளக் குறிப்பை அறியும் அறிவு இருக்கிறது. நம்மைப் போலச் 37