பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி மனிதனுக்குப் பலவற்றைக் காட்டினால்தான் தனக்குப் பிடிப்பது இன்னது என்று தெரிந்து கொள்ள முடியும். இப்படித் தான் செய்யவேண்டுமென்று ஒன்றையே சொன்னால் அதைச் செய்ய மனம் இல்லாதவன் ஏதோ தண்டனைக்கு உட்பட்டுச் செயல் செய்வானைப் போலச் செய்வான். தான் விரும்புகிற பொருளை வாங்கிச் சாப்பிடலாம் என்று எண்ணியே சில பிள்ளைகள் வீட்டிலுள்ள சிற்றுண்டிகளை உண்ணாமல் ஹோட்ட லுக்குப் போகிறார்கள். பல வகைகள் இருப்பதனால்தான் அவர் கள் நெஞ்சம் அதை நாடுகிறது. இறை வழிபாட்டிலும் பலவகை இருப்பதற்குக் காரணம் அவரவர்களுக்குப் பொருத்தமாகவும் வாய்ப்பாகவும் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும் என்பதுதான். பசி உடையவனுக்கு எங்கே உணவு கிடைத்தாலும் உடனே உண்ணுகின்ற ஆர்வம் உண்டாகும். பல உணவுச்சாலைகள் இருந்தாலும் இவ்வளவு இருக்கின்றனவே என்று அவன் மயங்க மாட்டான். எது அருகில் இருக்கிறதோ அங்கே சென்று கை யிலுள்ள பணத்திற்கு ஏற்ப எது கிடைக்கிறதோ அதை வாங்கி உண்டான். ஆர்வமும், அறிவும் கலந்த முயற்சி அது. இறைவனை நினைப்பூட்டுபவை இறைவனை வழிபட நமக்குச் சரீரம் அமைந்திருக்கிறதே யொழிய வேறு எதற்கும் இல்லை. பிரபஞ்சம் அதற்கு உதவியாக இருக்கிறது. நம்முடைய நாட்டில் நமது வாழ்க்கை முழுவதுமே இறை வழிபாட்டுக்கு ஏற்ப அமைந்திருக்கிறது. ஊரெல்லாம் விருந்து கொண்டாடுகிற நாள் இறைவனுடைய விழா நாளாக அமைகிறது. நம் இலக்கியங்கள் எல்லாம் இறைவனை நினைப் பூட்டுகின்றன. சிறந்த சிற்பங்களும், கலைகளும் இறைவனை நினைப்பூட்டுவனவாக அமைந்திருக்கின்றன. தமிழிலும் பிற மொழிகளிலும் பலவகையான தோத்திரங்கள் இருக்கின்றன. யந்திரம், மந்திரம், தந்திரம், புராணம், சாஸ்திரம், வேதம் என்று வழிபாட்டு நெறிகளுக்குரிய கருவிகள் எல்லாம் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இங்கே அளவுக்கு மிஞ்சி இருக் கின்றன. இவ்வளவு இருந்தும் அவற்றைப் பற்றிச் சிந்திக்காத அறிவு ஒருவனுக்கு இருக்குமானால் அவனை அறிவு உடை யவன் என்று எப்படிச் சொல்வது? 49