பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட் கவசம் அத்தனை படைகளை வைத்துக்கொண்டுள்ள திருமாலைச் சொல்லிவிட்டுப் பிரமாவைச் சொல்லும்போது அவனுடைய ஆயுதங்கள் அவ்வளவு சிறப்பின்மையால் அவற்றைச் சொல்லா மல் விட்டுவிட்டார். சங்கு சக்ராயுதன் விரிஞ்சன் அறியாச் சூலாயுதன் தந்த கந்தச்சுவாமி. சங்கு சக்கராயுதத்தையுடைய திருமாலும், பிரமனும் அறியாத சூலாயுதத்தை உடைய கடவுள் அளித்த குழந்தை கந்தசுவாமி. ஆறு குழந்தையாக இருந்தவன் உமாதேவியின் அணைப்பினால் ஒன்றுபட்ட காரணத்தால் கந்தசுவாமி என்று பெயர் வந்தது கொடி ஆறு உருவமும் ஒன்றாக இணைந்த கந்தசுவாமி மூன்று தலையும் ஒன்றாக இணைந்த வேலை ஒரு கரத்தில் வைத்திருக் கிறான். வேறு ஒரு கரத்தில் வெற்றிக்கு அடையாள மான கொடியை வைத்திருக்கிறான். அது வெறும் கொடி அன்று. அதுவும் ஆயுதத்தைப் படைத்த கொடி. சுடர்க்குடுமிக் கால் ஆயுதக் கொடியோன் மனிதர்கள் ஒருவருக்கொருவர் பகைகொண்டு பலவிதமான ஆயுதங்களுடன் சண்டை போட்டுக் கொள்வது போலவே, விலங்குகளும், பறவைகளும் சண்டை போடுவது உண்டு. மனிதனே அவற்றுக்குள் சண்டையை மூட்டிக் கண்டு களிப்பது வழக்கம். ஆட்டுச் சண்டை, மாட்டுச் சண்டை, கோழிச் சண்டை என்று கிராமங்களில் இன்றைக்கும் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இரண்டு ஆடுகள், இரண்டு மாடுகள் சண்டை போடும் போது கொம்பினால் ஒன்றை ஒன்று கடுமையாகத் தாக்கிப் போரிடும். கோழியைச் சண்டைக்கு விட்டால் அதன் காலில் கத்தியைக் கட்டிவிடுவார்கள். மனிதர்கள் தம் கையில் ஆயுதத்தை வைத்துக் கொண்டு சண்டைபோடுவது போல, கோழி காலில் ஆயுதத்தைக் கட்டிக்கொண்டு சண்டை போடுகிறது. ஆகவே கோழிக்குக் 'கால் ஆயுதம்' என்று பெயர்; காலில் ஆயுதத்தை உடையது என்று பொருள். அது எம்பெருமானுக்குக் கொடியாக இருக்கிறது. அது செக்கச் செவேல் என்று இருக்கும் 93