பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை இதிலிருந்து ஓர் உண்மை எனக்குத் தெளிவாயிற்று. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாடலில் மனம் கரைகிறது என்றும், அது அவரவர் மனப்பாங்கைப் பொறுத்தது என்றும் அறிந்து கொண்டேன். இப்படிப் பார்த்தால் ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு மனப் பாங்குடையவருக்கு உகந்ததாக இருக்கும். அதனால், எல்லாப் பாடல்களுமே பயனுள்ளவை, உணர்ச்சியை ஊட்டுபவை என்று தெளிய வேண்டும். மனித மன இயல்புகள் கணக்கில் அடங்காதவை. அவ் வியல்புகளை உணர்ந்தவர் அருணகிரிநாதர். அவர் பாடிய பாடல் கள் அந்த வெவ்வேறு இயல்புகளுக்கு ஒத்தனவாக அமைந் துள்ளன. எல்லாப் பாடல்களையும் யாவரும் பாடலாம்; பாராயணம் செய்யலாம். ஆனால் சில பாடல்களைச் சொல்லும்போது உள்ளம் உருகும். அவற்றை அடிக்கடி சொல்லிப் பழக வேண்டும். அவற்றிலும் ஏதாவது ஒரு பாட்டு இன்னதென்று சொல்ல முடியாத உணர்ச்சியை உண்டாக்கும். அதை நன்றாக மனத்தில் எழுதிக் கொண்டு சமயம் நேரும்போதெல்லாம் பாட வேண்டும; சிந்திக்க வேண்டும். அப்படிச் செய்வதே ஒருவகை யோகம். மனம் கரைந்து ஒருமைப்பட இப்பழக்கம் வழி செய்வதனால் யோகம் என்று சொல்லலாம். முருகன் அடியார்கள் தம் அநுபவத்தில் உணரும் செயல் இது. தமிழில் எத்தனையோ பிரபந்தங்களைப் பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். மிகவும் சுவையான, சொற்பொருள் இன்பங் களை நல்குவனவான பாடல்கள் பல அவற்றில் உண்டு. அவற்றைப் படிப்பதனாலும் பக்தி வளரலாம். ஆனால் அருளாளர் கள் பாடிய பாடல்களில் உள்ளம் தோய்ந்தால் விளையும் பயன் மிகப் பெரிது. அருணகிரிநாதர் அருளிய பாடல்களில் தோயத் தோய உள்ளத்திலே தோன்றும் உணர்ச்சியை இத்தகையதென்று சொல்லிக் காட்ட முடியாது. அதுவே ஒரு வழிபாடாக, அநுபவத் துறையிலே செலுத்தும் சாதனமாக மேற்கொள்வதற்குரியது. ★ ★ ★ இந்தப் புத்தகம் அலங்காரவரிசையில் 16-ஆவது வெளியீடு. இதில் கந்தர் அலங்காரத்தில் உள்ள 82-ஆம் பாடல் முதல் 88 3