பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சால நன்று உலோக வேலை செய்கிறவர்கள் விசுவகர்மாவினுடைய பரம்பரை என்று சொல்லிக் கொள்வார்கள். இப்படி எல்லாச் சாதிகளுக்கும் இறைவனோடு தொடர்புடைய வரலாறுகள் உண்டு. சமுதாயத் திலுள்ள சாதிகள் எல்லாம் இறைவனோடு தொடர்புடையன என்ற எண்ணமும், அதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பெருமிதமும், எல்லோரும் சேர்ந்து சமுதாயத்தை வளர்க்க வேண்டுமென்ற ஒற்றுமை நோக்கும் இருந்தன. அந்தக் காலத்தில் தோன்றினவர் அருணகிரியார். சாதிப் பெயர்களைத் தொனிக்கும்படி வைத்து இந்தப் பாட்டைப் பாடினார். கொல்லனாகிய கருமானையும், தோல் தைக்கும் தொழிலாளியாகிய செம்மானையும், வேடனையும், நெய்தல் வேலையை உடைய கைக்கோளனையும், மலைவாசியாகிய வேலனையும் இந்தப் பாட்டில் நினைப்பூட்டுகிறார். இறைவனை வாயார வாழ்த்துவது எல்லோருக்கும் எ ப்ய காரியம். அதைச் செய்துகொண்டு வாழவது எல்லோருக்கும் நல்ல செயல் என்பது இந்தப் பாட்டின் கருத்து. ★ கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு வரும்ஆ குலவனைச் சேவல்கைக் கோளனை வானம்உய்யப் பொருமா வினைச்செற்ற போர்வே லனைக்கன்னிப் பூகமுடன் தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே. (கரிய நிறம் பெற்ற திருமாலின் மருகனை, செந்நிறம் பெற்ற மான் உருவில் வந்த திருமகளுடைய மகளாகிய வள்ளி நாயகியைப் பிறர் அறியாமல் எடுத்து வரும் கவலையை உடையவனை, சேவலாகிய கொடியைக் கையிலே கொண்டவனை, தேவலோகத்திலுள்ள அமரர்கள் உயிர் பிழைக்கும் வண்ணம் அவர்களோடு பொருத சூரபதுமனாகிய மாமரத்தை அழித்த போரில் சிறந்த வேலாயுதமுடைய கடவுளை, குலை ஈனாத கமுகமரங்களுடன் பழங்களைத் தருகின்ற மாமரங்கள் பொருந்திய திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள முருகனை வாழ்த்துதல் வாழ்த்து பவருக்கு மிகவும் நன்றாகும். க.சொ.WI-12 181