பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலம்புரியும் கிண்கிணியும் அடைகிறான்; மீட்டும் பிறப்பதற்குரிய வழியைத் தேடிக் கொள் கிறான். பிரபஞ்ச வாசனையை இறைவன் திருவருளால் நீக்கிக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றவன் பிறப்பு இறப்புகளிலிருந்தும் நீங்குகிறான். இதைத்தான் கந்தர் அலங்காரத்தின் முதல்பாட்டில் நினைப்பூட்டினார். 'பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவா!' ஐந்து பூதங்களினால் ஆன இந்தப் பிரபஞ்சம் எல்லைக்குள் அடங்கியது. சலனம் இல்லாத மலைகளை எல்லைகளாக எட்டுத் திக்கிலும் கொண்டு அது இருக்கிறது. முருகப் பெருமான் அந்த எட்டுக் குல மலைகளையும் தன் விளையாடலினாலே தகர்த்து விடுகிறான். மிக்க வீரம் உடையவர்களும், பெரு முயற்சி செய் பவர்களும் மக்களை அழிக்கலாம். மாளிகைகளை அழிக்கலாம். நாட்டை அழிக்கலாம். மலைகளை அழிக்க ஒண்ணா. முருகன் அந்த அரிய செயலைச் செய்கிறான். வினை என்பது போருக்குப் பெயர். வினையாலும் அசைக்க முடியாத மலைகளை ஆண்டவன் விளையாட்டினாலே அசைக் கின்றான். மலைகளை அசைத்தால் அதனால் உயிர்களுக்கு ஊறு பாடு விளையுமே என்று தோன்றும் அல்லவா? அவன் செய்கிற இந்த விளையாட்டு உயிர்களுக்குத் துன்பம் விளைவிக்கவில்லை. இது ஒரு சிறந்த உட்கருத்தை உடையது. பிரபஞ்சத்தின் எல்லை களை எல்லாம் அறுத்த அவனுடைய திருவிளையாடல்கள், தன்னைச் சார்ந்தவர்களுக்குப் பிரபஞ்சச் சேற்றையே போக்கி இன்பம் தருபவன் அவன் என்பதை நினைப்பூட்டுகின்றன. அருள் விளையாடல் விளையாடும் பிள்ளை என்று சொல்கிறார். முருகப்பெருமான் செய்கிற காரியங்கள் அத்தனையும் விளையாட்டு. பொதுவாக, தெய்வங்கள் செய்வன வற்றைத் திருவிளையாடல் என்றே சொல்வார்கள். விளை யாட்டுக்கும் வினைக்கும் வேறுபாடு உண்டு. உலகத்தில் விளை யாட்டுக்கும் இரண்டு கட்சி உண்டு. வினைக்கும் இரண்டு கட்சி உண்டு. வினை முடிவில் தோல்வியும் துன்பமும் உறுவர் ஒரு கட்சியினர். வெற்றியும் மகிழ்ச்சியும் பெறுவர் மற்றொரு கட்சி 21 i