பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 என்ற தொடர் முதலில் சிறிது மயக்கத்தை உண்டாக்கியது. தான் என்பது அவன் என்னும் பொருளுடையது; அது இறைவனைக் சுட்டியது. யான் என்றது உயிரைச் சுட்டியது. உயிரும் இறைவனும் ஒருங்கே கெடுவதாவது என்று ஒரு மயக்கம் தோன்றியது. அப்பால் 'யான் தான் எனும் சொல் என்பதில் வரும் சொல்: என்னும் சொல்லில் அழுத்தம் இருப்பதை உணர்ந்தேன். யான், தான் என்று சொல்லும் நிலையை இழந்து, சொல்லிறந்து நிற்கும் மோன அநுபவத்தைச் சுட்டுவதாகத் தெளிந்தேன். இப்படித் தெளிவதற்கு உறுதுணையாக இருந்தது கந்தர் அநுபூதியில் வரும் பாட்டு ஒன்று. 'யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலைநின்றது.தற்பரமே” என்ற அற்புதப் பாட்டே அது. முதல் பாட்டில் 'கீன்றான் என்ற சொல்லை ஆண்டிருக்கிறார். கீள் என்பதன் அடியாகப் பிறந்த கீண்டான் என்ற சொல்லே பயில வழங்குவது. அங்கே எதுகையை நோக்கிக் கீன்றான் என்றே பாடுகிறார். இப்படி அருணகிரிநாதர் படைத்துத் தந்த சொற்கள் வேறு பல உண்டு. ★ வழக்கம்போல் இந்தப் புத்தகம் வெளி வருவதற்கும் பேருதவி செய்தவர் அன்பர் சிரஞ்சீவி அனந்தன். சில சமயங் களில் ஒரு முறைக்கு இரு முறை தட்டெழுத்தில் பிரதி செய்து தரும் பணியை அவர் புரிந்திருக்கிறார். தெய்வ பக்தியும், தமிழார் வமும், தொண்டு மனப்பான்மையும், பண்பும் உடைய அவருக்கு முருகன் திருவருளால் எல்லா நலன்களும் நிரம்ப வேண்டு மென்று வாழ்த்துகிறேன். கி.வா. ஜகந்நாதன் 15.O9.1962 242