பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 முகட்டைப் பிளந்து வளர்ந்திந்த்ர லோகத்தை முட்டஎட்டிப் பகட்டிற் பொருதிட்ட நிட்டுர சூர பயங்கரனே! (சிவப்புத் தகட்டைப் போலச் சிவந்த கடம்ப மலரையும் என் நெஞ்சையும் உன்னுடைய இரண்டு திருவடிக்கே செலுத்தி உன்னை வழி படும்படி என்னைப் பணிகொண்டருள்வாய்; பிரமனது அண்டத்தின் உச்சியைப் பிளந்து அதற்கு மேலும் வளர்ந்து இந்திர லோகத்தை முட்டும் படியாக எட்டி எருதைப் போல மோதிய கொடுமையையுடைய குர னுக்குப் பயத்தை உண்டாக்கிய பெருமானே! கடம்பும், சூரபயங்கரன் என்பதும் முருகன் என்று அடையாளம் காட்டின. தகட்டின் - தகட்டைப் போல; தகடு - மாணிக்கத்தைப் பதிக்கும்படி அடியில் வைக்கும் செந்நிறம் பெற்ற வர்ணத் தகடு; தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே (ஈடு) என்பது காண்க. செப்புத் தகடு என்றும் சொல்ல லாம். தகடு என்பதற்குப் புற இதழ் என்றும் பொருள் உண்டு. ஆதலின், தகட்டினாற் சிறந்த என்றும் கொள்ளலாம். இங்கே, இன் சாரியை. தாளிணைக்கே: ஏகாரம் பிரிநிலை; 'சிந்தனையும் அம்மலர்க்கே யாக்கி" (திருவாசகம்) என்பது போல. புகட்டி - புகுத்தி; செலுத்தி. பணிய - வணங்கல். பணித்தல் - ஏவல் செய்யும்படி ஆக்குதல்; ஏவுதல். புண்டரீகன் - பிரமன். அவன் அண்டம், பிரமாண்டம். முகடு - உச்சி. முட்ட முட்டும்படியாக. பகடு - காளை பகட்டின் - பகட்டைப் போல. நிட்டுரம் - கொடுமையுடைய, "சோர நிட்டுரனைச் சூரனை என்றும், "நிட்டுர சூர குலாந்தகனே' என்றும் முன்னே வந்துள்ளன. சூர பயங்கரனே - சூரனுக்குப் பயத்தைச் செய்பவனே; பிரதிவாதி பயங்கரன் என்பது போல நின்றது.) - இது கந்தர் அலங்காரத்தில் 82ஆவது பாட்டு. 3O